PF உறுப்பினர்களுக்கு புத்தாண்டு பரிசுகள்ள்: EPFO விதிகளில் அதிரடி மாற்றங்கள், அதிகரிகும் வசதிகள்

EPFO New Rules 2025: 2025 ஆம் ஆண்டில் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO செயல்படுத்தவுள்ள மாற்றங்களை பற்றி இங்கே காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 31, 2024, 11:13 AM IST
  • EPFO ​​இன் IT அமைப்பில் மேம்படுத்தல்.
  • ஓய்வூதியத்தை திரும்பப் பெறுவது எளிதாகும்.
  • ஈக்விட்டியில் முதலீடு செய்வதற்கான வசதி.
PF உறுப்பினர்களுக்கு புத்தாண்டு பரிசுகள்ள்: EPFO விதிகளில் அதிரடி மாற்றங்கள், அதிகரிகும் வசதிகள் title=

EPFO New Rules: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கியமான செய்தி. நாளை புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில், 2025 ஆம் ஆண்டில் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO செயல்படுத்தவுள்ள மாற்றங்களை பற்றி அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது மிக அவசியமாகின்றது. அவற்றை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.

EPFO New Rules 2025: புத்தாண்டு 2025 முதல்  EPFO -இல் அமலுக்கு வரவுள்ள முக்கிய மாற்றங்கள்:

1. Change in EPF Contribution: பணியாளர் பங்களிப்பு வரம்பில் மாற்றம்

தற்போது, ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 12% தொகையை இபிஎஃப் கணக்கில் (EPF Account) பங்களிக்கிறார்கள். ஆனால் இப்போது புதிய ஆண்டு முதல் இபிஎஃப் பங்களிப்பு (EPF Contribution) வரம்பை மாற்ற EPFO ​​தயாராகி வருகிறது. ரூ.15,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ள ஊதிய உச்சவரம்பை ரத்து செய்ய மத்திய அரசு தயாராகி வருவதாகவும், அதற்குப் பதிலாக உண்மையான சம்பளத்தின்படி பங்களிப்பு செய்வது குறித்து பரிசீலித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

2. Wage Ceiling Hike: ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்

தற்போது ரூ.15,000 ஆகவுள்ள ஊதிய உச்சவரம்பை ரூ.21,000 ஆக அதிகரிப்பது குறித்தும் ஆலோசனைகள் நடந்து வருகின்றன. இது இபிஎஃப் உறுப்பினர்களின் (EPF Members) ஓய்வூதிய சேமிப்பை அதிகரிக்கும். அதாவது, ஊழியர்கள் ஓய்வு பெறும்  காலத்திற்குள் ஒரு பெரிய நிதியை சேர்த்து விடுவார்கள். இதனால் அதிக ஓய்வூதிய கார்ப்பஸ் கிடைப்படோடு, மாத ஓய்வூதியமும் அதிகரிக்கும்.

3. PF ATM Withdrawal: ஏடிஎம்மில் இருந்து பிஎஃப் பணத்தை எடுக்கும் வசதி

புதிய ஆண்டில் இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு (EPF Subscribers) ஏடிஎம் -மில் இருந்து பிஎஃப் பணத்தை எடுக்க அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக, பிஎஃப் சந்தாதாரர்களின் வசதிக்காக கிரெடிட் கார்டு போன்ற அட்டையை வழங்க தொழிலாளர் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் எதிர்காலத்தில் ஏடிஎம்மில் இருந்து பிஎஃப் பணத்தை எடுக்க முடியும். இந்தத் திட்டம் 2025 ஆம் ஆண்டு மே-ஜூன் 2025க்குள் செயல்படுத்தப்படலாம் என கூறப்படுகின்றது. இதன் மூலம் பிஎஃப் பணத்தை திரும்பப் பெறும் செயல்முறை எளிதாகவும் வேகமாகவும் இருக்கும். இபிஎஃப் உறுப்பினர்களின் நேரம் மிச்சமாகும். பணத்தை எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம்.

மேலும் படிக்க | அடிக்கடி UPI பயன்படுத்துபவரா நீங்கள்? ஜனவரி 1 முதல் விதிகளில் மாற்றம்!

4 Facility To Invest in Equity: ஈக்விட்டியில் முதலீடு செய்வதற்கான வசதி

EPFO அதன் உறுப்பினர்களை பங்குகளில் முதலீடு செய்ய அனுமதிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது. இது PF கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் நிதியை மிகவும் திறம்பட நிர்வகிக்கும் வாய்ப்பை வழங்கும். ஓய்வூதிய நிதி அமைப்பு நேரடி பங்கு முதலீட்டை அனுமதித்தால், உறுப்பினர்கள் அதிக வருமானத்தை எதிர்பார்க்கலாம். இது புதிய நிதியாண்டில் எப்போது வேண்டுமானாலும் செயல்படுத்தப்படலாம் என கூறப்படுகின்றது.

5 Easy Pension withdrawal: ஓய்வூதியத்தை திரும்பப் பெறுவது எளிதாகும்

ஜனவரி 1, 2025 முதல் மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியக் கட்டண முறையை (CPPS) செயல்படுத்த EPFO ​​முடிவு செய்துள்ளது. இந்த புதிய முறையின் மூலம், ஓய்வூதியதாரர்கள் (Pensioners) நாட்டில் உள்ள எந்த வங்கியில் வேண்டுமானாலும், எந்த வங்கிக் கிளையில் வேண்டுமானாலும், தங்கள் ஓய்வூதியத்தை இனி பெற் முடியும். 

6 EPFO IT System Upgrade: EPFO ​​இன் IT அமைப்பில் மேம்படுத்தல்

மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சமீபத்தில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் விரைவில் புதிய தகவல் தொழில்நுட்ப அமைப்பை கொண்டு வர உள்ளதாகவும், இதன் மூலம் பணியாளர்கள் வேலை மாறிய பின் உறுப்பினர் ஐடியை மாற்ற வேண்டிய தேவை நீக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த மேம்படுத்தல் ஜூன் 2025க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டால், உறுப்பினர்களின் க்ளெய்ம்கள் முன்பை விட வேகமாக செட்டில் செய்யப்படும்.

மேலும் படிக்க | மிடில் கிளாஸ் மக்களுக்கு காத்திருக்கும் Good News.... வருமான வரி விதிப்பில் நிவாரணம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News