மூத்த குடிமக்களுக்கு மத்திய அரசின் 3 முத்தான பரிசுகள்: எப்போது கிடைக்கும்?

Senior Citizens: சமீபத்தில், மூத்த குடிமக்களுக்கு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கம் சில புதிய முக்கிய சலுகைகளை அறிவித்துள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 3, 2025, 12:44 PM IST
  • இந்த நன்மைகளுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
  • இவற்றுக்கு என்ன ஆவணங்கள் தேவைப்படும்?
  • இவற்றின் மூலம் கிடைக்கும் நன்மை என்ன?
மூத்த குடிமக்களுக்கு மத்திய அரசின் 3 முத்தான பரிசுகள்: எப்போது கிடைக்கும்? title=

Senior Citizens: மத்திய அரசு மூத்த குடிமக்களுக்காக பல வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.  அவர்களுக்கு பல வித சலுகைகளும் அளிக்கப்படுகின்றன. முதியோர்களுக்கு பொருளாதார மற்றும் சமூக பாதுகாப்பை வழங்குவதே இவற்றின் முக்கிய நோக்கமாகும். சமீபத்தில், மூத்த குடிமக்களுக்கு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கம் சில புதிய முக்கிய சலுகைகளை அறிவித்துள்ளது.

மூத்த குடிமக்களுக்காக அரசாங்கம் அறிமுகம் செய்துள்ள திட்டங்கள்

மூத்த குடிமக்களுக்காக அரசாங்கம் மூலம் அளிக்கப்பட்டுள்ள பெரிய நன்மைகள் பற்றிய விரிவான தகவல்களை இங்கே காணலாம். மேலும், இந்த நன்மைகளுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது? இவற்றுக்கு என்ன ஆவணங்கள் தேவைப்படும்? இவற்றின் மூலம் கிடைக்கும் நன்மை என்ன? இவை அனைத்தை பற்றியும் இங்கே காணலாம். இந்த தகவல்கள் மூத்த குடிமக்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Pension Hike: ஓய்வூதிய உயர்வு

சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தை வயதுக்கு ஏற்ப உயர்த்த வேண்டும் என்று 2023ல் நாடாளுமன்ற கூட்டுக் குழு (JPC) பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையின்படி, 65 வயதில் 5%, 70 வயதில் 10%, 75 வயதில் 15%, 80 வயதில் 20% என்ற வகையில் ஓய்வூதியத்தை உயர்த்த பரிந்துரைக்கப்பட்டது. எனினும், இந்த பரிந்துரை இதுவரை அமல்படுத்தப்படவில்லை. ஆனால், இது மிக விரைவில் அமல்படுத்தப்படும் என கூறப்படுகின்றது.

பணி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களை பொருளாதார ரீதியாக வலிமையாக்குவதே ஓய்வூதியத்தை அதிகரிப்பதன் நோக்கம் என்று ஜேபிசி பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசு ஓய்வூதியம் பெறுபவர்கள் பின்வருமாறு வயது அடிப்படையிலான கூடுதல் ஓய்வூதியத்தைப் பெறுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

- 80 வயதில் 20%
- 85 வயதில் 30%
- 90 வயதில் 40%
- 95 வயதில் 50%
- 100 ஆண்டுகளில் 100%

மேலும் படிக்க | அதிரடியாய் தொடங்கிய 2025: அகவிலைப்படி உயர்வால் எகிறப்போகும் சம்பளம்

Health Insurance: சுகாதார காப்பீடு

ஆயுஷ்மான் பாரத் (Ayushman Bharat) திட்டத்தில் சமீபத்தில் பெரும் மாற்றம் செய்யப்பட்டது. தற்போது வரை இத்திட்டம் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்காக இருந்தது. ஆனால் இப்போது அதன் நோக்கம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களும் இத்திட்டத்தின் பயனைப் பெறுவார்கள் என்று அரசாங்கம் சமீபத்தில் அறிவித்தது. இது தவிர, 11 புதிய வகைகளும் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

அரசின் இந்த நடவடிக்கை மூத்த குடிமக்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களாலும் பாராட்டப்பட்டது. இது நாட்டின் சுகாதாரத் துறையில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவரும் என நம்பப்படுகின்றது. இதன் மூலம் கோடிக்கணக்கான மக்கள் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெற முடியும். இது ஏழைக் குடும்பங்களுக்கு வரப்பிரசாதமாக இருப்பது மட்டுமின்றி நடுத்தர மக்களுக்கும் பெரும் நிம்மதியை அளிக்கும்.  

Railway Ticket Concession: ரயில் டிக்கெட் விலையில் சலுகை

கோவிட்-19 தொற்றுநோய்க்கு முன்னர், மூத்த குடிமக்கள் மற்றும் பெண்களுக்கு ரயில் டிக்கெட்டுகளில் சலுகைகள் வழங்கப்பட்டு வந்தன. இந்த சலுகை மார்ச் 2020 முதல் நிறுத்தப்பட்டது. முன்னதாக, மூத்த குடிமக்களுக்கு ரயில் டிக்கெட்டுகளில் 50 சதவீத தள்ளுபடி அளிக்கப்பட்டது. இந்த சலுகையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என நீண்ட நாட்களாக மூத்த குடிமக்கள் சார்பில் கோரிக்கை உள்ளது. இந்த பட்ஜெட்டில் இது தொடர்பான சாதகமான பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதபட்டுள்ளது. அரசின் கொள்கைகளும் திட்டங்களும் அவ்வப்போது மாறலாம். திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் முன், தொடர்புடைய அரசாங்கத் துறை அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஆதாரங்களில் இருந்து சமீபத்திய மற்றும் துல்லியமான தகவலைப் பெறவும். இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் எடுக்கப்படும் எந்த நடவடிக்கைக்கும் ஜீ மீடியா பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | SIP: தினம் ரூ.20 சேமிப்பில்... கோடீஸ்வரர் ஆக உதவும் பரஸ்பர நிதியம்... இன்றே முதலீட்டை தொடங்கவும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News