சிம் வாங்குவதில் இனி சிக்கல்: புதிய விதி...52 லட்சம் இணைப்புகள் துண்டிப்பு: அரசின் அதிரடி முடிவு

SIM Cards: மொபைல் போன்களின் சிம் கார்டு மூலம் நடக்கும் மோசடியை தடுக்க மத்திய அரசு இந்த பெரிய முடிவை எடுத்துள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 18, 2023, 01:03 PM IST
  • இனி சிம் கார்டை மொத்தமாக வாங்க முடியாது .
  • 52 லட்சம் மொபைல் இணைப்புகள் மூடப்பட்டன.
  • இவர்களுக்கு 10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
சிம் வாங்குவதில் இனி சிக்கல்: புதிய விதி...52 லட்சம் இணைப்புகள் துண்டிப்பு: அரசின் அதிரடி முடிவு title=

மொபைல் சிம் கார்டு டீலர்கள்: சிம்கார்டு தொடர்பாக மத்திய அரசு நேற்று ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. தற்போது, ​​நாடு முழுவதும் இணைய மோசடிகள் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன, இதைத் தடுக்க நேற்று மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நாடு முழுவதும் உள்ள சுமார் 67,000 சிம் கார்டு டீலர்களை தடுப்புப்பட்டியலில் சேர்த்துள்ளார். இதனுடன், மோசடியைத் தடுக்க, சிம் கார்டு விற்பனையாளரின் போலீஸ் சரிபார்ப்பை (Police Verification) அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது.

மொபைல் போன்களின் சிம் கார்டு மூலம் நடக்கும் மோசடியை தடுக்க மத்திய அரசு இந்த பெரிய முடிவை எடுத்துள்ளது. சிம் கார்டுகளை விற்கும் டீலர்களுக்கு போலீஸ் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இனி சிம் கார்டை மொத்தமாக வாங்க முடியாது 

மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வியாழக்கிழமையன்று முறைகேடுகளைத் தடுக்க, சிம் கார்டு டீலர்களை போலீஸ் சரிபார்ப்பை அரசு கட்டாயமாக்கியுள்ளதாகவும், மொத்தமாக 'இணைப்பு' வழங்குவது தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

52 லட்சம் மொபைல் இணைப்புகள் மூடப்பட்டன

52 லட்சம் மொபைல் இணைப்புகளை அரசு மூடியுள்ளது என்று அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். 67,000 சிம் கார்டு டீலர்கள் தடுப்புப்பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். மே 2023 முதல், சிம் கார்டு விற்பனையாளர்கள் மீது 300 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவர்களுக்கு 10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்

மோசடி செயல்களில் ஈடுபட்ட சுமார் 66,000 கணக்குகளை வாட்ஸ்அப் நிறுவனமே முடக்கியுள்ளதாக அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். தற்போது மோசடியை தடுக்க சிம்கார்டு விற்பனையாளரின் போலீஸ் சரிபார்ப்பை கட்டாயமாக்கியுள்ளோம் என்று அவர் மேலும் கூறினார். விதிகளை மீறும் வியாபாரிகளுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

சிம் கார்டு டீலர்களின் சரிபார்ப்பு தொலைத்தொடர்பு நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் என்று அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். டீலரை நியமிப்பதற்கு முன் ஒவ்வொரு விண்ணப்பதாரரின் விவரங்களையும் சரிபார்ப்பதற்காக அவருடைய வணிகம் தொடர்பான ஆவணங்களையும் அவர்கள் சேகரிப்பார்கள். நாட்டில் 10 லட்சம் சிம் கார்டு டீலர்கள் இருப்பதாகவும், அவர்களின் போலீஸ் சரிபார்ப்பைப் பெறுவதற்கு அவர்களுக்கு போதுமான அவகாசம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

உண்மையில், பெரும்பாலும் சைபர் மோசடி செய்பவர்கள், மோசடி செயலை செய்தவுடன் உடனடியாக சிம் கார்டை மாற்றுகிறார்கள். சில காலத்திற்கு முன்பு ஒடிசாவில் 16000 ப்ரீ ஆக்டிவேடட் சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டன. இந்த சிம்கார்டுகள் எந்த நபர்களின் பெயர்களில் எடுக்கப்பட்டனவோ, அவர்களுக்கு இதை பற்றி தெரியாது. அனைத்தும் போலி ஆவணங்களை பயன்படுத்தி மோசடியாக வாங்கப்பட்ட சிம் கார்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | உங்கள் உறவினர்களின் பணம் வங்கியில் இருக்கிறதா? இனி அதை எடுப்பது சுலபம்

போலீஸ் சரிபார்ப்புக்கு நேரம் கிடைக்கும்

10 லட்சம் சிம் டீலர்கள் இருப்பதாகவும், அவர்களுக்கு போலீஸ் சரிபார்ப்புக்கு போதிய அவகாசம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். மொத்தமாக 'இணைப்பு' வழங்கும் சேவையையும் தொலைத்தொடர்பு துறை நிறுத்தியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.  அதற்கு பதிலாக, வணிக இணைப்புகள் என்ற புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்படும்.

KYC அவசியம்

இது தவிர தொழில் நிறுவனங்களின் கேஒய்சி மற்றும் சிம் எடுக்கும் நபரின் கேஒய்சியும் செய்யப்படும் என்று அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். ஒரு நிறுவனம் அல்லது முதலீட்டாளரின் அடையாளத்தையும் முகவரியையும் அங்கீகரிக்க KYC உதவுகிறது.

மோசடியில் ஈடுபட்ட 66,000 கணக்குகளை வாட்ஸ்அப் நிறுவனம் முடக்கியுள்ளதாக அவர் கூறினார். சிம்கார்டு விற்பனையாளர்களுக்கு போலீஸ் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், அதை மீறுபவர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார். சிம் கார்டு டீலர்களின் சரிபார்ப்பு தொலைத்தொடர்பு நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் என்று அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். டீலரை நியமிப்பதற்கு முன் ஒவ்வொரு விண்ணப்பதாரரின் விவரங்களையும் சரிபார்ப்பதற்காக அவருடைய வணிகம் தொடர்பான ஆவணங்களையும் அவர்கள் சேகரிப்பார்கள். நாட்டில் 10 லட்சம் சிம் கார்டு டீலர்கள் இருப்பதாகவும், அவர்களின் போலீஸ் சரிபார்ப்பைப் பெறுவதற்கு அவர்களுக்கு போதுமான அவகாசம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மொத்த இணைப்பு சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். அதற்கு பதிலாக, தற்போது புதிய வணிக இணைப்பு வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சிம் டீலர்களின் கேஒய்சியுடன், சிம் எடுக்கும் நபரின் கேஒய்சியும் செய்யப்படும்.

உண்மையில், நாட்டில் உள்ள சைபர் மோசடி செய்பவர்கள் மோசடி செய்தவுடன் உடனடியாக சிம் கார்டை மாற்றுகிறார்கள். சில காலத்திற்கு முன்பு ஒடிசாவில் 16000 முன் செயல்படுத்தப்பட்ட சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டன. இந்த சிம்கார்டுகள் அப்படிப்பட்டவர்களின் பெயரில் எடுக்கப்பட்டவை.

மேலும் படிக்க | குறைந்த முதலீட்டில் பம்பர் வருமானம்... லட்சங்களை அள்ளித் தரும் டாய் பிஸினஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News