பழைய ஓய்வூதியத் திட்டம்: நாடு முழுவதும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. தற்போது பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக பல மாநிலங்களில் பெரும் விவாதங்களும் சர்ச்சைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பழைய ஓய்வூதியத் திட்டம் (ஓபிஎஸ்) பல மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை அமல்படுத்துவது தொடர்பாக பல மாநிலங்களில் வாக்குவாதம் நடந்து வருகிறது. தற்போது, நாட்டின் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெறும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது அல்லது புதிய முறையில் மாற்றங்களை செய்வது பற்றி அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
இப்போது மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வூதியத்தைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அரசு ஊழியர்களுக்கு இனி அதிக சலுகைகள் கிடைக்கும். இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
ஓய்வூதியத் திட்டத்தில் மாற்றம் வரும்
மத்திய அரசு சார்பில், ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு இணையான சலுகைகள் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கான திட்டமிடல் அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியர்களுக்கு பெரும் பலன்களை அளிக்கும் வகையில் பல விதிகளை கொண்டு வருவது குறித்து அரசு இப்போது பரிசீலித்து வருகிறது.
குறைந்தபட்ச உத்தரவாத திட்டத்தை அரசாங்கம் பரிசீலிக்கிறது
இத்தனைக்கும் மத்தியில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த பல மாநிலங்கள் மறுத்துவிட்டன. இப்போது மத்திய அரசு புதிய அதாவது தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் குறைந்தபட்ச உத்தரவாதத் திட்டத்தைக் கொண்டுவர திட்டமிடுவதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் ஓய்வூதியம் பெறுவோர் கூடுதல் பயன் பெறுவார்கள். இதனுடன், 14 சதவீதத்துக்கும் மேல் பங்களிப்பு வழங்குவது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது. எனினும், இதன் தாக்கம் அரசு கருவூலத்தின் மீது இருக்கும்.
வருடாந்திர விருப்பமும் கிடைக்கலாம்
ஓய்வூதியத்தை அதிகரிக்க, வருடாந்திரத்தில் (Annuity) அதிக முதலீடு செய்யலாம். தற்போது, மொத்த நிதியில் 40% வருடாந்திரத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊழியர் கடைசியாக வாங்கிய ஊதியத்தில் சுமார் 35% ஓய்வூதியமாக கிடைக்கிறது. இருப்பினும், இது சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளதால் இதற்கு உத்தரவாதம் இல்லை.
பழைய ஓய்வூதியத் திட்டத்தின் நன்மைகள் என்ன?
பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களைப் பற்றி பேசுகையில், அதன் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், இது கடைசியாக வாங்கப்பட்ட சம்பளத்தின் அடிப்படையில் வழங்கப்படுகின்றது. இது தவிர, பணவீக்க விகிதம் அதிகரிக்கும்போது, அகவிலைப்படியும் அதிகரிக்கிறது. அரசு புதிய ஊதியக்குழுவை அமல்படுத்தினாலும், ஓய்வூதியத்தை உயர்த்துகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ