ஒருவர் தனிநபர் கடன் வாங்கும் போது, சிபில் ஸ்கோர் நன்றாக இருந்தால், கடன் கிடைக்கும் என்று நம்பினால் அது உண்மையில்லை. கிரெடிட் ஸ்கோர் எனப்படும் சிபில் ஸ்கோரும் முக்கிய பங்கு வகிக்கிறது என்றே சொல்லலாம். பொதுவாக, ஒரு வங்கி ஒரு நபருக்கு தனிநபர் கடனை வழங்கும்போது, அது CIBIL ஸ்கோரைத் தவிர வேறு 3 வகையான விகிதங்களையும் சரிபார்க்கிறது. இந்த நான்கு காரணிகள் தான், கடன் வாங்குபவர், கடன் தொகையை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துவாரா இல்லையா என்பதை நிர்ணயிப்பதாக கூறப்படுகிரது.
CIBIL ஸ்கோர் தவிர வங்கி சரிபார்க்கும் விகிதங்கள் எவை?
கடன்-வருமான விகிதம்
உங்கள் கடன்-வருமான விகிதம் (debt-to-income ratio (DTI)) என்பது உங்கள் மொத்த மாதாந்திர வருமானத்தால் வகுக்கப்படும் உங்கள் மாதாந்திர கடன் செலுத்துதல் விகிதம் ஆகும். நீங்கள் எவ்வளவு கடன் வேண்டும் என விண்ணப்பித்துள்ளீர்களோ, அந்தப் பணத்தைத் திருப்பிச் செலுத்துவதற்கான மாதாந்திரக் தவணைத் தொகையை செலுத்தும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா என்பதை கணக்கிடுவது தான் கடன் - வருமான விகிதம் ஆகும்.
கடனை திருப்பிச் செலுத்தும் உங்கள் திறனைக் கடனளிப்பவர்கள் அளவிடுவதற்கான ஒரு வழி இதுவாகும். நீங்கள் எந்தவிதமான கடன் வாங்க விண்ணப்பித்துள்ளீர்களோ அதற்கேற்றாற்போல டிடிஐ வரம்புகள் இருக்கும். அதாவது, தனிநபர் கடனுக்கான டிடிஐ குறியீடும், வாகனக் கடனுக்கான டிடிஐ குறியீடும் ஒரே நபருக்கு வெவ்வேறாக இருக்கும்.
இந்த விகிதம் மாதாந்திர கடன் செலுத்துதல் மற்றும் உங்கள் மொத்த சம்பளத்தை ஒப்பிடுவதன் மூலம் கணக்கிடப்படுகிறது. டிடிஐ விகிதம் குறைவாக இருந்தால், கடன் பெறுவதற்கான தகுதி அதிகமாகும். உங்களுக்கு ஏற்கனவே உள்ள கடன்கள் மற்றும் நிதிநிலையை புரிந்துக் கொள்ள இந்த விகிதம் உதவுகிறது.
மேலும் படிக்க | PPF: தினமும் வெறும் ரூ.405 சேமித்து எளிதில் கோடீஸ்வரராவது எப்படி?
EMI/NMI விகிதம்
EMI/NMI விகிதத்தின் மூலம், உங்களின் நிகர மாதாந்திர வருவாயில், வாங்கப்போகும் கடன் மற்றும் ஏற்கனவே இருக்கும் கடனுக்கு நீங்கள் எவ்வளவு தவணை செலுத்துவீர்கள் என்பதை கணக்கிட்டு அதற்கேற்றாற் போல, கொடுக்கப்போகும் கடனை வங்கி முடிவு செய்யும். இந்த விகிதம் இஎம்ஐ/என்எம்ஐ 50-55 சதவிகிதம் வரை இருந்தால் கடன் கிடைப்பது சுலபம்.
ஆனால் சம்பளத்தில் 55 சதவிகிதத்திற்கு அதிகமாக தவணை செலுத்தும் விகிதமாக EMI/NMI விகிதம் இருந்தால், வங்கிகள் கடனைக் கொடுக்காது. கடன் கொடுக்க முடிவு செய்தாலும், வட்டி விகிதம் அதிகமாக இருக்கும். கடன் தொகையானது, நிகர மாத வருமானத்தின் பெருக்கமாக இருக்கும். விண்ணப்பதாரரின் மாத வருமானத்தில் 10 முதல் 24 மடங்கு வரை கடன் கொடுக்கலாம். .
கடன்-மதிப்பு விகிதம் (LTV)
இந்த விகிதம் அனைத்துக் கடன்களிலும் பரிசீலிக்கப்பட்டாலும், வீட்டுக் கடன் விஷயத்தில் இது முக்கியமானது கடன் மதிப்பு விகிதம் (Loan-to-Value (LTV) Ratio). இது, வாராக்கடன் ஆபத்தைப் புரிந்துகொள்வதற்கானது. கடனுக்கு விண்ணப்பித்தவரின் சொத்து அல்லது பிணையத்துடன் ஒப்பிடும்போது, கொடுக்கப்படும் கடன் எவ்வளவு என்பதை LTV விகிதம் காட்டுகிறது. இதன் அடிப்படையில், தேவையான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை உருவாக்கப்படும் என்பதால் Loan-to-Value (LTV) Ratio மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
மேலும் படிக்க | வங்கிகள் கொடுக்கும் அதிகபட்ட வட்டி! இது நிலையான வைப்பு எஃப்.டி விகிதங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ