வீட்டு கடன் வாங்குவதற்கு முன்னர் கவனத்தில் கொள்ள வேண்டியவை!

பல கடன் வழங்கும் நிறுவனங்கள் அதிக முன்பணம் அல்லது மார்ஜின் பங்களிப்பைச் செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்த வட்டி விகிதங்களை வழங்கத் தொடங்கியுள்ளனர்.  

Written by - RK Spark | Last Updated : Aug 11, 2022, 09:52 AM IST
  • வீட்டுக் கடன் வாங்கும் விண்ணப்பதாரர்கள் 75% - 90% வரை வீட்டுக் கடன் பெருகிறார்கள்.
  • அதிக முன்பணம் அல்லது மார்ஜின் பங்களிப்பைச் செலுத்துவது அவசியமானதாகும்.
  • 750 மற்றும் அதற்கு மேல் க்ரெடிட் ஸ்கோர் கொண்ட நபர்களுக்கு கடன் உடனடியாக வழங்கப்படுகிறது.
வீட்டு கடன் வாங்குவதற்கு முன்னர் கவனத்தில் கொள்ள வேண்டியவை! title=

வீடு கட்டுவது பலருக்கும் ஒரு கனவு.  பணத்தை கையில் வைத்திருப்பவர்கள் உடனடியாக வீட்டை  முடித்துவிடுவார்கள்.  போதுமான இருப்பு கையில் இல்லாதவர்கள் வங்கிகள், சில நிதி நிறுவங்களின் வீட்டு கடன்களை பெற முயல்கின்றனர்.  வீட்டுக் கடன் கடன் பெறுபவரின் கிரெடிட் ஸ்கோர் மற்றும் மார்ஜின் பங்களிப்பு அல்லது முன்பணம் செலுத்தும் திறன் மற்றும் எதிர்காலத்தில் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தும் திறனைப் பொறுத்து வழங்கப்படுகிறது.  மேலும் வங்கிகளிலிருந்து நாம் கடனை வாங்குவதற்கு முன்னர் சில விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமானதாகும்.

வீட்டுக் கடன் வாங்கும் விண்ணப்பதாரர்கள் வீடுகட்ட 75% - 90% வரை வீட்டுக் கடன் பெற அனுமதிக்கப்படுகிறார்கள், மீதமுள்ள தொகையை விண்ணப்பதாரர்கள் சொந்தமாக ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்.  எனவே, நீங்கள் வீட்டுக் கடனைப் பெறத் திட்டமிட்டால், முன்பணம் அல்லது மார்ஜின் பங்களிப்பைச் செய்ய சொத்து மதிப்பில் 10%-25% வரை அளிப்பதை நோக்கமாகக் கொள்ளுங்கள்.  குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன்களைப் பெற விரும்பினால், அதிக முன்பணம் அல்லது மார்ஜின் பங்களிப்பைச் செலுத்துவது அவசியமானதாகும்.  பல கடன் வழங்கும் நிறுவனங்கள் அதிக முன்பணம் அல்லது மார்ஜின் பங்களிப்பைச் செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்த வட்டி விகிதங்களை வழங்கத் தொடங்கியுள்ளனர்.

மேலும் படிக்க | 8th pay commission: புதிய ஓய்வூதியக்குழு அமைக்கப்படுமா? மத்திய அரசு விளக்கம்!

750 மற்றும் அதற்கு மேல் க்ரெடிட் ஸ்கோர் கொண்ட நபர்களை கடன் வழங்கும் நம்பகமானவர்களாக கருதுகின்றனர்.  அதிகமானளவில் க்ரெடிட் ஸ்கோர் வைத்திருப்பவர்களுக்கே கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் முன்னுரிமை வழங்குகின்றது, இவர்களுக்கு கடன் வழங்குவதற்கு அவர்கள் எவ்வித தயக்கமும் கொள்வதில்லை.  நீங்கள் எதிர்காலத்தில் வீட்டுக் கடனைப் பெறத் திட்டமிட்டால், 750 மற்றும் அதற்கு மேல் கிரெடிட் ஸ்கோர் வைத்திருக்கும் நோக்கில் செயல்படத் தொடங்குங்கள்.  கிரெடிட் பீரோக்கள் அல்லது ஆன்லைன் நிதிச் சந்தை இடங்களிலிருந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் உங்கள் கடன் அறிக்கையைப் பெறுவதன் மூலம் செயல்முறையைத் தொடங்கவும்.  உங்கள் கிரெடிட் கார்டு பில்களை மற்றும் ஏற்கனவே உள்ள இஎம்ஐ-களை நிலுவைத் தேதிக்குள் செலுத்துவது போன்றவற்றை கடைபிடியுங்கள்.  கடன் பயன்பாட்டு விகிதத்தை 30%க்குள் பராமரித்தல் மற்றும் குறுகிய காலத்திற்குள் பல கடன் அல்லது கிரெடிட் கார்டு விண்ணப்பங்களைத் தவிர்ப்பது நலல்து. இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவது உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்த உதவுகிறது.

நோய் பாதிப்பு, வேலைஇல்லாமை போன்ற பல்வேறு காரணங்களால் உங்களால் எதிர்காலத்தில் சரியான நேரத்தில் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்படக்கூடும்.  வீட்டுக் கடன் இஎம்ஐ-களை அவற்றின் நிலுவைத் தேதிக்குள் திருப்பிச் செலுத்தத் தவறினால் உங்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் மற்றும் அது உங்கள் கிரெடிட் ஸ்கோரையும் பாதிக்கும்.  வீட்டுக் கடன் வழங்குபவர்கள், புதிய வீட்டுக் கடனின் இஎம்ஐ உட்பட, மாதாந்திரக் கடனைத் திருப்பிச் செலுத்தும் கடப்பாடுகளைக் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் மாதாந்திர வருமானத்தில் 50% -60% க்குள் கடன் வழங்க விரும்புகிறார்கள்.

மேலும் படிக்க | ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி: இந்த புதிய திட்டம் மூலம் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ  

Trending News