Alert! இந்த இரண்டு ஆவணங்கள் இல்லாமல் இனி வங்கியில் பணம் செலுத்த முடியாது!

வங்கிகளில் வாடிக்கையாளர்கள் ஒரு பெரிய தொகையை டெபாசிட் செய்யும் போது பான் கார்டு மற்றும் ஆதார் அட்டை கொடுப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jul 22, 2022, 09:16 AM IST
  • வங்கிகளில் பெரிய தொகையை டெபாசிட் செய்யும் போது பான், ஆதார் அட்டையை காட்ட வேண்டும்.
  • அரசு நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக பணம் செலுத்தினால் அபராதம்.
  • ரூ.2 லட்சத்துக்கு மேல் பணத்தைப் பெறுவதை அரசு தடை செய்கிறது.
Alert! இந்த இரண்டு ஆவணங்கள் இல்லாமல் இனி வங்கியில் பணம் செலுத்த முடியாது! title=

சட்டவிரோதமான மற்றும் கணக்கில் வராத டிரான்ஸாக்ஷன்களை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  அந்த முயற்சியில் முதற்கட்ட நடவடிக்கையாக அரசாங்கம் வங்கிகளில் பணம் எடுக்கும் அளவு குறித்து குறிப்பிட்ட அளவை நிர்ணயம் செய்துள்ளது.  மேலும் இந்த நிதியாண்டில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வங்கிகளில் அதிக அளவு பணத்தை டெபாசிட் செய்வதற்கு பான் கார்டு மற்றும் ஆதார் அட்டையை கட்டாயமாக்கியுள்ளது.  வங்கிகளில் வாடிக்கையாளர்கள் ஒரு பெரிய தொகையை டெபாசிட் செய்யும் போது பான் கார்டு மற்றும் ஆதார் அட்டையை காட்ட வேண்டும் என்றும் அதுதவிர்த்து அரசு நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக பணம் செலுத்தினாலோ அல்லது பணம் பெற்றாலோ கடும் அபராதம் விதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ஆன்லைனில் PF கணக்கின் இருப்பை சரிபார்ப்பது எப்படி?

அரசாங்கத்தின் புதிய விதிகளின் அடிப்படையில் வங்கிகளில் ரூ.20 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்யவோ அல்லது எடுக்கவோ பான் எண் அல்லது ஆதார் அட்டையை ஆதாரமாக வங்கியில் அதிகாரிகளிடம் காண்பிக்க வேண்டும் என்கிற நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  அரசாங்கம் இந்த அதிரடி அறிவிப்பை கடந்த மே 10, 2022 அன்று வெளியிட்டு அமல்படுத்தியது.  மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) வருமான வரி விதிகள், 2022-ன் கீழ் சில புதிய விதிகளை உருவாக்கியுள்ளது.  வாரியத்தின் இந்த புதிய விதிகள் செயல்பாட்டிற்கு வந்த பிறகு, வங்கி நிறுவனம், கூட்டுறவு வங்கி அல்லது தபால் அலுவலகங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கணக்குகள், என ஏதேனும் ஒன்றில், ஒரு நபர் ஒரு நிதியாண்டில் மொத்தம் 20 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் டெபாசிட் செய்தால் அந்த நபர் பான் மற்றும் ஆதார் அட்டையை அங்கு கொடுக்க வேண்டும்.

பான் கார்டு இல்லாதவர்கள் ஒரு நாளில் ரூ.50,000க்கு மேல் அல்லது ஒரு நிதியாண்டில் ரூ.20 லட்சத்துக்கும் அதிகமான ட்ரான்ஸாக்ஷனுக்கு குறைந்தபட்சம் ஏழு நாட்களுக்கு முன் பான் எண்ணுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.  மேலும் ஏதேனும் ஒரு வங்கி நிறுவனம், கூட்டுறவு வங்கி அல்லது தபால் அலுவலகங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கணக்குகளில் இருந்து ஒரு நிதியாண்டில் மொத்தம் 20 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை எடுத்தால், அவர் பான் அல்லது ஆதார் அட்டையைக் கொடுக்க வேண்டும்.  அதுமட்டுமல்லாது, எந்த காரணத்திற்காகவும் 2 லட்ச ரூபாய்க்கு மேல் ட்ரான்ஸாக்ஷன் செய்ய வருமான வரித்துறை சட்டங்கள் தடை விதிக்கின்றன.  எனவே, அதிகப்படியான ட்ரான்ஸாக்ஷன்களை தவிர்க்கவும், இல்லையெனில் உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

ரூ.2 லட்சத்துக்கு மேல் பணத்தைப் பெறுவதை அரசு தடை செய்கிறது.  அதனால் ஒரே நாளில் உங்களால் ரூ.2 லட்சத்துக்கு மேல் பணமாக எடுக்க முடியாது.  ஒரே நேரத்தில் ஒரு டோனரிடமிருந்து ரூ.2 லட்சத்திற்கு மேல் ரொக்கப் பரிசாக ஏற்றுக்கொள்ள முடியாது, அப்படி செய்தால் பெறப்பட்ட தொகைக்கு இணையான அபராதம் விதிக்கப்படும்.  உடல்நலக் காப்பீட்டிற்கு பணம் செலுத்த வேண்டியதில்லை, வரி செலுத்துவோர் காப்பீட்டு பிரீமியத்தை பணமாக செலுத்தினால், அவர் பிரிவு 80D விலக்குக்கு தகுதி பெற மாட்டார்.  சொத்து சம்மந்தமான டிரான்ஸாக்ஷனில் அதிகபட்சமாக ரூ.20,000 அனுமதிக்கப்படுகிறது.

மேலும் படிக்க | Income Tax Vs TDS: வருமான வரிக்கும், TDS-க்கும் உள்ள சில வித்தியாசங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News