ஏர் ஏசியா Flying Taxi வர்த்தகத்தை அடுத்த ஆண்டு தொடங்குகிறதா..!!

பறக்கும் டாக்சி சேவை குவாட்காப்டர் (Quadcopter) மூலம் வழங்கப்படும். அதில் நான்கு இருக்கைகள் இருக்கும். குவாட்காப்டர் என்பது ஒரு வகை ஹெலிகாப்டர் ஆகும். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 8, 2021, 08:17 AM IST
  • பறக்கும் டாக்சி சேவை குவாட்காப்டர் (Quadcopter) மூலம் வழங்கப்படும்.
  • அதில் நான்கு இருக்கைகள் இருக்கும்.
  • குவாட்காப்டர் என்பது ஒரு வகை ஹெலிகாப்டர் ஆகும்.
ஏர் ஏசியா  Flying Taxi வர்த்தகத்தை அடுத்த ஆண்டு தொடங்குகிறதா..!! title=

மலேசிய பட்ஜெட் விமான நிறுவனமான ஏர் ஏசியா குழுமம் சனிக்கிழமையன்று பறக்கும்-டாக்ஸி (Flying Taxi) வர்த்தகத்தை அடுத்த ஆண்டு தொடங்க திட்டமிட்டுள்ளதாக, ஏர் ஏசியா தலைமை நிர்வாக அதிகாரி (CEO) டோனி பெர்னாண்டஸ் கூறியுள்ளார்.

இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து நிறுவனம் செயல்பட்டு வருவதாகவும், அதைத் தொடங்க சுமார் ஒன்றரை வருடம் ஆகும் என்றும் கூறினார். இளைஞர் பொருளாதார மன்றம் நடத்திய ஆன்லைன் கலந்துரையாடலில் அவர் இது குறித்த தகவல்களை வெளியிட்டார்.

பறக்கும் டாக்சி சேவை குவாட்காப்டர் (Quadcopter) மூலம் வழங்கப்படும் என்றும், அதில் நான்கு இருக்கைகள் இருக்கும் என்றும் மலேசிய  (Malaysia) பட்ஜெட் விமான நிறுவனமான ஏர் ஏசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி பெர்னாண்டஸ் மேலும் கூறினார். குவாட்காப்டர் என்பது ஒரு வகை ஹெலிகாப்டர் ஆகும். 

COVID-19 தொற்றுநோய் காரணமாக, விமான போக்குவரத்து நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், ஏர் ஏசியா இப்போது டிஜிட்டல் தளத்தில் (Digital Paltfrom) வர்த்தகத்தை விரிவுபடுத்தியுள்ளது என்றும், பயணம்,  ஷாப்பிங், நிதி சேவை வரை பல வித் சேவைகளை வழங்கும் ஒரு “சூப்பர் செயலியை” அறிமுகப்படுத்தியுள்ளது என்றார்.  இந்த பன்முக தன்மையினால், வருவாயை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இதற்கிடையில், டாடா சன்ஸ் தனது வர்த்தக கூட்டாளியான ஏர் ஏசியா ( AIr Asia) குழுமத்தின் பெர்ஹாட்டின் 32.67 சதவீத பங்கு பங்குகளை வாங்குவதன் மூலம் பட்ஜெட் ஏர்லைன் நிறுவனமான ஏர் ஏசியா இந்தியாவில் தனது பங்குகளை அதிகரிக்க உள்ளது.

பட்ஜெட் விமான நிவனமான ஏர் ஏசியா நிறுவனத்தில், டாடா சன்ஸ் 51 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது, 49 சதவீதம் பங்குகள் ஏ.ஐ.ஐ.எல்.( AAIL) நிறுவனத்திடம் உள்ளது

பரிவர்த்தனைக்குப் பிறகு, டாடாவின் (TATA) பங்கு 83.67 சதவீதமாகவும், AAIL இன் பங்கு 16.33 சதவீதமாகவும் இருக்கும்.

டர்ஸா சன்ஸ்  ஏர் ஏசியாவின் பங்குகளை வாங்குவது ஒப்பந்தத்தை  AAIL இன் வாரியத்தை அனுமதித்துள்ள என ஏர் ஏசியா குழுமம் பெர்ஹாட் பர்சா மலேசியாவுக்கு அளித்த  தகவலில் கூறப்பட்டுள்ளது

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட ஏஏஐ AAI  33 ஏர்பஸ், ஏ 320 விமானங்களுடன் இந்தியா முழுவதும் 19 இடங்களுக்கு உள்நாட்டு விமான சேவைகளை வழங்குகிறது.

ALSO READ | Post Office கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு Good News... விபரம் உள்ளே..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News