இத்தாலிய செய்தி நிறுவனங்கள் -Google இடையே கையெழுத்தானது ஒப்பந்தம்

கூகுள் தளத்தில்  வெளியிடப்படும், தங்கள் உள்ளடக்கங்களுக்காக பணம் செலுத்த வேண்டும்  உலகின் மிகவும் பிரபலமான  தேடுதல் தளமான கூகிளை ஐரோப்பிய ஊடக நிறுவனக்கள் கோரி வருகின்றன. இந்நிலையில், இத்தாலிய செய்தி நிறுவனங்களுக்கும் Google நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 24, 2021, 07:41 PM IST
  • கூகிள் நியூஸ் ஷோகேஸ் வரும் வாரங்களில் இத்தாலியில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • முதலில் ஜெர்மனியில், பின்னர் பெல்ஜியம், இந்தியா, நெதர்லாந்து மற்றும் பிற நாடுகளில் தொடங்கப்படும்.
  • கூகிள் நிறுவனத்துடன் ஆர்.சி.எஸ் மீடியா குழுமம் (RCS Media group) உட்பட பல இத்தாலிய செய்தி வெளியீட்டு நிறுவனங்கள் கையெழுத்திட்டன.
இத்தாலிய செய்தி நிறுவனங்கள் -Google இடையே கையெழுத்தானது ஒப்பந்தம் title=

கூகுள் தளத்தில்  வெளியிடப்படும், தங்கள் உள்ளடக்கங்களுக்காக பணம் செலுத்த வேண்டும்  உலகின் மிகவும் பிரபலமான  தேடுதல் தளமான கூகிளை ஐரோப்பிய ஊடக நிறுவனக்கள் கோரி வருகின்றன. இந்நிலையில், இத்தாலிய செய்தி நிறுவனங்களுக்கும் Google நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. 

கூகிள் நியூஸ் ஷோகேஸ்  (Google News Showcase) என்பது செய்தி வெளியீட்டாளர்களின் உள்ளடக்கத்திற்கு ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கான ஒரு உலகளாவிய தயாரிப்பு ஆகும். இதில் கூட்டாளி உறவு உள்ல செய்தி வெளியீட்டு நிறுவனங்களுக்கு, அவர்கள் உள்ளடக்கத்தை நிர்வகிக்கவும், பயனர்களுக்கு பணம் செலுத்துவதன் அடிப்படையில்,  மட்டுப்படுத்தப்பட்ட அணுகலை வழங்கவும் அனுமதிக்கும் புதிய சேவையாகும்.

கூகிள் நியூஸ் ஷோகேஸ் வரும் வாரங்களில் இத்தாலியில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என  இத்தாலியில் உள்ள கூகிளின் செய்தி தொடர்பாளர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

ALSO READ | ஆஸ்திரேலியாவில் இனி செய்தி நிறுவனங்களுக்கு Google, Facebook பணம் செலுத்த வேண்டும்

கூகிள் அக்டோபரில் ஷோகேஸ் வழியாக வெளியிடப்படும் செய்திகளுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளில் உலகளவில் செய்தி வெளியிட்டு நிறுவனங்களுக்கு  ஒரு பில்லியன் டாலர் செலுத்த திட்டமிட்டுள்ளது, இது முதலில் ஜெர்மனியில், பின்னர் பெல்ஜியம், இந்தியா, நெதர்லாந்து மற்றும் பிற நாடுகளில் தொடங்கப்படும்.

கூகிள் நிறுவனத்துடன் ஆர்.சி.எஸ் மீடியா குழுமம் (RCS Media group) உட்பட பல இத்தாலிய செய்தி வெளியீட்டு நிறுவனங்கள் கையெழுத்திட்டன.  ஆர்.சி.எஸ் மீடியா குழுமம் தினமும், கொரியேர் டெல்லா செரா  (Corriere della Sera) மற்றும் பிரபலமான விளையாட்டு நாளேடான காஸெட்டா டெல்லோ ஸ்போர்ட் (Gazzetta dello Sport), நிதி செய்தி வெளியீட்டாளரான  Il Sole 24 ore மற்றும் ரோம் சார்ந்த செய்தி நிறுவனமான, Caltagirone editore  ஆகியவற்றின் செய்திகளை வெளியிடுகிறது.

இந்த ஒப்பந்தங்களில் 13 இத்தாலிய நிறுவனக்கள் நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளன, கூகிள் ஷோகேஸ் பயனர்கள்,  76 தேசிய மற்றும் உள்ளூர் செய்தி நிறுவனக்களின் உள்ளடக்கத்தை அணுகலாம்.

அமெரிக்க தொழில்நுட்பக் குழு ஜெர்மனி, பிரேசில் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள பிற செய்தி நிறுவனங்களுடன் இதேபோன்ற ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ | அடி பணிந்தது Facebook... ஆஸ்திரேலியாவில் கையெழுத்தானது ஒப்பந்தம்..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News