AAVIN Recruitment 2020: மதுரை ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!! எப்படி விண்ணப்பிப்பது?

கால்நடை ஆலோசகருக்கான இளம் மற்றும் திறமையான ஆர்வலர்களை AAVIN அழைக்கிறது. ஆவின் மதுரை ஒன்றியத்தில் 04 காலியிடங்கள் நிரப்பப்படும். 

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 29, 2020, 06:18 PM IST
AAVIN Recruitment 2020: மதுரை ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!! எப்படி விண்ணப்பிப்பது? title=

ஆவின் ஆட்சேர்ப்பு 2020: மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட், 13.08.2020 அன்று மதுரையில் நேர்முகத்தேர்வில் நேர்காணலை நடத்த உள்ளது. மதுரை மாவட்டத்தின் கிராமப்புறங்களில் N.A.D.P திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணியாற்ற கால்நடை ஆலோசகருக்கான இளம் மற்றும் திறமையான ஆர்வலர்களை AAVIN அழைக்கிறது. ஆவின் மதுரை ஒன்றியத்தில் 04 காலியிடங்கள் (Recruitment) நிரப்பப்படும். தமிழ்நாடு அரசு (Tamil Nadu Government Jobs) வேலைகளைத் தேடும் விண்ணப்பதாரர்கள் 13.08.2020 அன்று காலை 09.00 மணிக்கு நடைபெற உள்ள நேர்காணலில் தேவையான விண்ணப்ப படிவம் மற்றும் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. 

அரசு வேலைக்குத் (Government Jobs) தயாராகி வருகிறீர்கள் என்றால் உங்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பு உள்ளது. நீங்கள் இந்த வேலையில் சேர ஆர்வமாக இருந்தால், தேவையான தகுதிகள் உங்களிடம் இருந்தால், நிச்சயமாக இந்த பதவிக்கு விண்ணப்பிக்கவும்.

ALSO READ | வேலைக்காக தன் தந்தையை கொன்ற மகன்.. உதவி செய்த தாயும் சகோதரனும்

வேலையில் சேர விருப்பம் உள்ளவர்கள் ஆவின் (AAVIN Madurai Vacancy) நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் aavinmilk.com கிடைக்கிறது. 

கால்நடை ஆலோசகர் (Veterinary Consultant) பணிக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப முறை, தேர்வு முறை, கடைசி தேதி பற்றிய விவரங்களை பற்றி பார்ப்போம்!!

AAVIN Milk Madurai Recruitment 2020 -விவரங்கள்

நிறுவனத்தின் பெயர் மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட்
வேலை மாநில அரசு
பதவி கால்நடை ஆலோசகர்
சம்பளம் ரூ .30000
மொத்த காலியிடம் 04
பணி இடம்  மதுரை, தமிழ்நாடு
நேர்காணல் தேதி 13.08.2020
அதிகாரப்பூர்வ வலைத்தளம் aavinmilk.com

ALSO READ | 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு... 25,000 விவசாயிகளுக்கு பயனளிக்கும் அரசின் புதிய திட்டம்!

கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட எந்த கால்நடை கல்லூரிகள் / பல்கலைக்கழகங்களிலிருந்தும் கால்நடை அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயது எல்லை
விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 50 வயது இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை
வேலைக்கு ஆட்கள் தேர்வுசெய்யும் முறை நேர்காணலின் அடிப்படையில் இருக்கும்.

நேர்காணல் எங்கு நடக்கும்? 
தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட இடத்தில் நேர்காணலில் கலந்து கொள்ளலாம் மற்றும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

தேதி நேரம் இடம்
13.08.2020 காலை 9 மணி MDCMPU வளாகம்

ALSO READ | CRPF இல் ஆள்சேர்ப்பு, முழு விண்ணப்ப செயல்முறை இங்கே பார்க்கவும்

இந்த வேலைகளுக்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் தங்களது தகுதியை உத்தியோகபூர்வ அறிவிப்பில் கூறியதை சரிபார்க்க வேண்டும், விரிவான வழிமுறைகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. கல்வித் தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப முறை, கட்டணம் மற்றும் எவ்வாறு விண்ணப்பிப்பது போன்ற கால்நடை ஆலோசகர் பதவிகளின் தகவல்களை இங்கே aavinmilk.com பெறுவீர்கள். 

Trending News