ஊழியர்களுக்கு அசத்தலான புத்தாண்டு பரிசுகள்: டிஏ மட்டுமல்ல, இந்த அலவன்சுகளிலும் அதிரடி ஏற்றம்

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) விரைவில் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 19, 2023, 07:06 AM IST
  • கொடுப்பனவுகளில் ஏற்றம்.
  • பயணக் கொடுப்பனவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
  • வீட்டு வாடகை கொடுப்பனவும் அதிகரிக்கப்படும்.
ஊழியர்களுக்கு அசத்தலான புத்தாண்டு பரிசுகள்: டிஏ மட்டுமல்ல, இந்த அலவன்சுகளிலும் அதிரடி ஏற்றம் title=

7வது ஊதியக்குழு, சமீபத்திய செய்திகள்: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பல நல்ல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இன்னும் சில நாட்களில் அவர்கள் மீண்டும் சில நல்ல செய்திகளை பெறக்கூடும். மத்திய அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) விரைவில் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

சமீபத்தில் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி, பண்டிகை நேரத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கணிசமான நிதிப் பலன்களை அளித்துள்ளது. தீபாவளி போனஸ் மற்றும் டிஏ நிலுவைத் தொகையுடன் கிராச்சுட்டியும் அவர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழிய்ரகளின் (Central Government Employees) அகவிலைப்படியும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணமும் 4% அதிகரிக்கப்பட்டு 46% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கான நல்ல செய்திகள் முடிந்துவிடவில்லை. அவர்களுக்கு பல புத்தாண்டு பரிசுகளும் காத்திருகின்றன. 

மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு மீண்டும் 2024 -இல் தொடங்கும். ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (ஏஐசிபிஐ) குறியீட்டின் அடிப்படையில், தற்போதைய டிஏ (Dearness Allowance) 46 சதவீதமாக உள்ளது. எனினும், சமீபத்திய ஏஐசிபிஐ குறியீடின் (AICPI Index) தரவு 137.5 புள்ளிகளுடன் 48.54 சதவீதத்தை எட்டியிருப்பதால், வரவிருக்கும் மாதங்களில் அகவிலைப்படியில் மேலும் 4-5 சதவீத உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | பங்குச் சந்தையில் மீண்டும் வர்த்தகத்தை நிறுத்தியது ரிலையன்ஸ் கேபிட்டல்! காரணம் என்ன?

பயணக் கொடுப்பனவு அதிகரிக்க வாய்ப்புள்ளது

சமீபத்திய டிஏ உயர்வுக்குப் (DA Hike) பிறகு, மத்திய அரசு ஊழியர்களுக்கான பயணப்படியும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணப்படி அகவிலைப்படியுடன் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முக்கிய TPTA நகரங்களில், இந்த முறை கிரேடு 1 முதல் 2 வரையிலான ஊழியர்கள் முறையே ரூ.1800 மற்றும் ரூ.1900 பெறலாம். அதே சமயம் கிரேடு 3 முதல் 8 ஊழியர்கள் ரூ.3600 + டிஏ -ஐ எதிர்பார்க்கலாம். மற்ற நகரங்களில், இந்த விகிதம் ரூ. 1800 + டி.ஏ ஆக இருக்கும்

வீட்டு வாடகை கொடுப்பனவும் அதிகரிக்கப்படும்

இந்த நிதி ஊக்குவிப்புகளைத் தவிர, அடுத்த ஆண்டு துவக்கத்தில் வீட்டு வாடகை கொடுப்பனவு (House Rent Allowance) திருத்தம் செய்யப்படும் என கூறப்படுகின்றது. இது சுமார் 3 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய போக்குகளின்படி, டிஏ 50 சதவீதத்திற்கு மேல் இருந்தால் எஹ்ஆர்ஏ திருத்தங்களுக்கு உட்படுகிறது. தற்போது X, Y, Z வகை நகரங்களில் 27, 24, மற்றும் 18 சதவிகிதம் எஹ்ஆர்ஏ வழங்கப்படுகின்றது. முன்மொழியப்பட்ட உயர்வு இந்த விகிதங்களை முறையே 30, 27 மற்றும் 21 சதவிகிதமாக உயர்த்தலாம் எனினும் அகவிலைப்படி 50 சதவிகிதத்தை எட்டினால்தான் எஹ்ஆர்ஏ திருத்தப்படும். மார்ச் 2024 இல் மத்திய அரசு ஊழியர்களுக்கான எஹ்ஆர்ஏ 3 சதவிகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கொடுப்பனவுகளில் ஏற்றம்

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் அகவிலைப்படி (DA), பயணப்படி (TA), வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA), மருத்துவ செலவுகள் (Medical Reimbursement) போன்ற அலவன்ஸ்கள் அடங்கும். அகவிலைபப்டி அதிகரித்த பிறகு, பயணப்படியும் அதிகரிக்கப்படுகிறது. அகவிலைப்படி ஒரு குறிப்பிட்ட அளவை எட்டும்போது எச்ஆர்ஏ -விலும் அதிகரிப்பு ஏற்படுகின்றது. அனைத்து அலவன்சுகளையும் கணக்கில் கொண்டு ஒரு மத்திய ஊழியரின் மாதாந்திர CTC கணக்கிடப்படுகிறது. 

மேலும் படிக்க | மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேலும் தளர்வுகள்? சூப்பர் ஐடியா செய்யும் தமிழ்நாடு அரசு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News