DA HIke: அகவிலைப்படியுடன் அதிகரிக்கும் பிற அலவன்சுகள்: பம்பர் ஊதிய ஏற்றம், ஊழியர்கள் ஹேப்பி

50% DA Hike For Central Govt Employees: ஒரு ஆண்டில் ஜனவரி மற்றும் ஜூலை என இரு முறை அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டுகிறது. இந்த முறை அகவிலைப்படி அதிகரிப்பு சற்று வித்தியாசமானது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 15, 2024, 12:55 PM IST
  • வீட்டு வாடகை கொடுப்பனவு அதிகரிக்கும்.
  • குழந்தைகளின் கல்வி உதவித்தொகை.
  • குழந்தை பராமரிப்புக்கான சிறப்பு கொடுப்பனவு.
DA HIke: அகவிலைப்படியுடன் அதிகரிக்கும் பிற அலவன்சுகள்: பம்பர் ஊதிய ஏற்றம், ஊழியர்கள் ஹேப்பி title=

 50% DA Hike For Central Government Employees: சமீபத்தில் மத்திய அரசு தனது ஊழியர்களின் அகவிலைப்படியை 50 சதவீதமாக உயர்த்தியது. இது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய நிவாரணத்தை அளித்துள்ளது. இந்த உயர்வு ஜனவரி 2024 முதல் அமலுக்கு வரும். அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவை ஈடுசெய்யும் வகையில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (Dearness Allowance) அளிக்கப்படுகின்றது. 

ஒரு ஆண்டில் ஜனவரி மற்றும் ஜூலை என இரு முறை அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டுகிறது. இந்த முறை அகவிலைப்படி அதிகரிப்பு சற்று வித்தியாசமானது. அகவிலைப்படி இப்போது 50% -ஐ எட்டியுள்ளதால், இதனுடல் இன்னும் பல கொடுப்பனவுகளும் அதிகரிக்கும். டிஏ உயர்வால் (DA Hike) ஊழியர்களுக்கு பிற அலவசுகளில் ஏற்படவுள்ள நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

அகவிலைப்படி உயர்வால் ஏற்பட்ட ஊதிய உயர்வு

மத்திய அரசு ஊழியர்களின் (Central Government Employees) அகவிலைப்படி இப்போது 4% அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்கள்ளின் ஊதியத்தில் நல்ல ஏற்றம் இருக்கும். ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். 

அடிப்படை ஊதியம் ரூ.15,000

- ஒருவரது அடிப்படை சம்பளம் ரூ.15 ஆயிரம் என வைத்துக்கொள்வோம்.
- ரூ.15 ஆயிரத்தில் 50% = ரூ.7500
-மொத்த சம்பளம் (டிஏ+அடிப்படை சம்பளம்)=ரூ.22,500
- 46% அகவிலைப்படியில், 15,000 ரூபாய் அடிப்படை ஊதியத்தில் கிடைத்த ஊதியம் = ரூ.21,900
- 50% அகவிலைப்படியில், 15,000 ரூபாய் அடிப்படை ஊதியத்தில் கிடைக்கும் ஊதியம் = ரூ.22,500.
- டிஏ 4% அதிகரித்த பிறகு ஊதியத்தில் ஏற்பட்டுள்ள ஏற்றம்=22,500-21,900 = ரூ.1,600

அடிப்படை ஊதியம் ரூ.50,000

- ஒருவரது அடிப்படை சம்பளம் ரூ.50 ஆயிரம் என வைத்துக்கொள்வோம்.
- ரூ.15 ஆயிரத்தில் 50% = ரூ.25,000
-மொத்த சம்பளம் (டிஏ+அடிப்படை சம்பளம்)=ரூ.75,000
- 46% அகவிலைப்படியில், 50,000 ரூபாய் அடிப்படை ஊதியத்தில் கிடைத்த ஊதியம் = ரூ.73,000 
- 50% அகவிலைப்படியில், 73000 ரூபாய் அடிப்படை ஊதியத்தில் கிடைக்கும் ஊதியம் = ரூ.75,000
- டிஏ 4% அதிகரித்த பிறகு ஊதியத்தில் ஏற்பட்டுள்ள ஏற்றம்=75,000-73,000 = ரூ.2,000

மேலும் படிக்க | Paytm Fastag மாற்ற கடைசி வாய்ப்பு! இன்றே கடைசி நாள்.... இல்லையென்றால் 2 மடங்கு கட்டணம்

பிற கொடுப்பனவுகளிலும் ஏற்றம்

ஏழாவது ஊதியக் குழுவின் (7th Pay Commission) பரிந்துரைகளின் படி, அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 50 சதவீதமாகும் போது, அவர்களது மற்ற படிகளும் உயர்த்தப்படும். இதன் காரணமாக, அவர்களின் சம்பளத்தில் நல்ல ஏற்றம் இருக்கும். 

அகவிலைப்படி 50% -ஐ எட்டியதால் இந்த  கொடுப்பனவுகள் அதிகரிக்கும்

- வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA), X,Y,Z நகரங்களில் 27, 18, 9 ஆக இருந்த வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) 30, 20, 10 சதவிகிதமாக அதிகரிக்கும்.
- குழந்தைகளின் கல்வி உதவித்தொகை
- குழந்தை பராமரிப்புக்கான சிறப்பு கொடுப்பனவு
- விடுதி மானியம்
- இடம் மாற்றத்துக்கான TA 
- பணிக்கொடை வரம்பு
- யூனிஃபார்ம் கொடுப்பனவு
- சொந்த வாகனத்திற்கு மைலேஜ் கொடுப்பனவு
- தினசரி கொடுப்பனவு
- பயணக் கொடுப்பனவு
- கேன்டீன் அலவன்ஸ்
- டெபுடேஷன் அலவன்ஸ்

மேலும் படிக்க | மக்களுக்கு நல்ல செய்தி... பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News