7th Pay Commission: மோடி அரசு இன்னும் சில நாட்களில் அகவிலைப்படி (டிஏ), மற்றும் அகவிலை நிவாரணம் (டிஆர்) உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 38% அகவிலைப்படி வழங்கப்பட்டு வரும் நிலையில், ஹோலி பண்டிகைக்குப் பிறகு லட்சக்கணக்கான ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 38% லிருந்து 42% ஆகவும், ஃபிட்மென்ட் காரணியையும் உயர்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று சில செய்திகள் தெரிவிக்கிறது. அகவிலைப்படி 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டால், ஊழியர்களின் சம்பளத்தில் அகவிலைப்படியும் உயரும், பே மேட்ரிக்ஸ் அளவை பொறுத்து ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு மாறுபடும். மார்ச் 8-ம் தேதிக்குப் பிறகு அகவிலைப்படி மற்றும் ஃபிட்மென்ட் காரணியை திருத்த அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும் படிக்க | 7th Pay Commission: 18 மாத டிஏ நிலுவைத் தொகை கிடைக்கவுள்ளதா? முக்கிய அப்டேட் இதோ
தற்போது, பொதுவான ஃபிட்மென்ட் காரணி 2.57% ஆக உள்ளது, அதாவது 4200 கிரேடு பேயில் ஊழியர் ரூ.15,500 பெறுவார், 6வது மத்திய ஊதியக் குழுவின்படி (ரூ. 15,500 x 2.57) பெருக்குவதன் மூலம் ஊழியர்களுக்கு மொத்தமாக ரூ.39, 835 கிடைக்கும். 6-வது ஊதியக் குழு ஃபிட்மென்ட் விகிதத்தை 1.86% எனப் பரிந்துரைத்திருந்த நிலையில், 7-வது ஊதியக்குழு ஃபிட்மென்ட் விகிதத்தை 2.57% என்று பரிந்துரைத்து, அதன்படி தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. அதேசமயம் மத்திய அரசு ஊழியர்கள் ஃபிட்மென்ட் காரணியை 3.68 ஆக உயர்த்த வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கையினை அரசு ஏற்று ஃபிட்மென்ட் காரணியை உயர்த்தினால், ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 லிருந்து ரூ.26,000 ஆக உயர்த்தப்படும்.
அகவிலைப்படி கணக்கீடு:
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி கணக்கீடு - {(அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் சராசரி (அடிப்படை ஆண்டு -2001 =100) கடந்த 12 மாதங்களில் -115.76)/115.76} x 100.
மத்திய பொதுத்துறை ஊழியர்களுக்கு அகவிலைப்படி கணக்கீடு - {(அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் சராசரி (அடிப்படை ஆண்டு -2001 =100) கடந்த 3 மாதங்களில் -126.33)/126.33} x 100.
மேலும் படிக்க | Jackpot! உங்கள் தலை எழுத்தை மாற்றும் ‘இந்த’ பிங்க் நிற 20 ரூபாய் நோட்டு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ