இந்தியாவில் ட்விட்டர் ப்ளூ டிக் - கட்டண விவரம் அறிவிப்பு!

ட்விட்டர் நிறுவனத்தின் ப்ளூ டிக் வெரிபிகேஷன் செயல்பாடுக்கான எலான் மஸ்க் அறிவித்த கட்டண விவரம் தற்போது வெளியாகியுள்ளது..

Written by - Sudharsan G | Last Updated : Nov 11, 2022, 10:15 AM IST
  • விரைவில் புதிய வெரிபிகேஷன் நடைமுறை வெளியாகும்.
  • கட்டணம் செலுத்தினால் மட்டும் போதுமானது.
  • வேறு எந்த வெரிபிகேஷன் செயல்பாடுகளும் கிடையாது.
இந்தியாவில் ட்விட்டர் ப்ளூ டிக் - கட்டண விவரம் அறிவிப்பு! title=

ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்து எலான் மஸ்க் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆட்குறைப்பு, வேலை நேரத்தை அதிகரித்தல் போன்ற அமைப்பு ரீதியான மாற்றத்தை தொடர்ந்து, ட்விட்டரால் அங்கீகரிக்கப்படும் பயனர்களுக்கு வழங்கப்படும் ப்ளூ டிக் (Blue Tick) நடைமுறை அனைவருக்கும் வழங்கப்படும் என்றும், அதற்கு எட்டு அமெரிக்க டாலர்கள் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 

இந்த நடைமுறை, அமெரிக்க இடைநிலை தேர்தலுக்காக தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தற்போது அதுசார்ந்த பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி, பல பயனர்களுக்கு ப்ளூ டிக் வசதிக்கு கட்டணம் செலுத்தும் நடைமுறை குறித்த பயனர்களுக்கு ட்விட்டர் நிறுவனம் தகவல் கெரிவித்துள்ளது. 

அந்த வகையில், கட்டணம் செலுத்தி ப்ளூ டிக் வெரிபிக்கேஷன் செய்துகொள்ளும் நடைமுறையை, ட்விட்டர் இந்தியாவிலும் செயல்படுத்த தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக, ட்விட்டரின் சில இந்திய பயனர்களை, உடனடியாக கட்டணம் செலுத்தி ப்ளூ டிக் பெற்றுக்கொள்ளும்படி அந்நிறுவனம் நோட்டிபிக்கேஷன் அனுப்பியுள்ளது. குறிப்பாக, ஐபோன் வைத்திருக்கும் பயனர்களுக்கு மட்டுமே தற்போது இந்த சேவை அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | ட்விட்டரில் Blue Tick அப்ளை செய்வது எப்படி?

இந்நிலையில், ட்விட்டர் கணக்கில் ப்ளூ டிக் வெரிபிக்கேஷன் செய்வதற்கான தொகை குறித்த விவரம் வெளியாகியுள்ளது. மாதத்திற்கு 8 அமெரிக்க டாலர் என கூறப்பட்ட நிலையில், இந்திய ரூபாய்படி, மாதத்திற்கு ரூ. 719 செலுத்தி ப்ளூ டிக்கை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ப்ளூ டிக் வாங்குவதற்கு கட்டணம் செலுத்தினால் மட்டும் போதுமானது, வேறு எந்த வெரிபிகேஷன் செயல்பாடுகளும் தேவையில்லை. ப்ளூ டிக் வாங்குவதன் மூலம், பதிவுகளின் வீச்சு மற்றும், அதை முன்னிலைப்படுத்துதல் போன்ற சேவைகள் வழங்கப்படும் என அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது. இதன்மூலம், உலகம் முழுவதும் ட்விட்டர் நிறுவனம் பெருந்நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளது. 

எலான் மஸ்க் தொடர்ந்து செய்துவரும் இதுபோன்ற அதிரடிகள், அடுத்தடுத்த மாதங்களில் அதிகரிக்கும் என அவரே தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்வீட்டில்,"வரும் மாதங்களில் ட்விட்டர் பல முட்டாள்தனமான செயல்களைச் செய்யும் என்பதை குறித்துவைத்துக் கொள்ளுங்கள். பயனளிப்பதை மட்டும் வைத்துக்கொண்டு, பயனளிக்காமல் இருப்பதை மாற்றுவோம்" என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் படிக்க |  வொர்க் ப்ரம் ஹோம் இனி கிடையாது... அதிரடி காட்டும் எலான் மஸ்க்!

தற்போது, கட்டணம் செலுத்தி ப்ளூ டிக் பெற்றுக்கொண்டால், பயனர் பெயருக்கு (User name) கீழே அதிகாரப்பூர்வ லேபிள் இடம்பெற்றிருக்கும், இந்தியாவில் க்ரே (Grey) செக்மார்க் இடம்பெற்றுள்ளது.  அதிகாரப்பூர்வ முத்திரை குறித்து எலான் மஸ்கிடம் கேட்டபோது, அதை மிரட்டலாக வடிவமைத்துள்ளேன் என கூறியிருந்தார். 

கட்டணம் வசூலிக்கும் ப்ளூ டிக் நடைமுறைக்கு பல்வேறு தரப்பினர் எதரிப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், பெரும்பாலான பயனர்கள் வேறு சமூக வலைதளங்களை நோக்கி நகரும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ட்விட்டர் நிறுவனத்திற்கு தினமும் நான்கு மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பீடு ஏற்படுவதாக எலான் மஸ்க் தெரிவித்தார். தொடர்ந்து, 3,600-க்கும் மேற்பட்டவர்களை அந்நிறுவனம் சமீபத்தில் பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க |  'தெரியாம தூக்கிட்டோம்... திரும்ப வாங்க' - பணியாளர்களிடம் பல்டி அடிக்கும் ட்விட்டர் - ஏன் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News