IRCTC: துபாயை சுற்றிப் பார்க்க போலாமா? குறைந்த விலையில் சூப்பர் ஆஃபர் தரும் பேக்கேஜ்

IRCTC Tour Package To Dubai: குறைவான பட்ஜெட் செலவில் வெளிநாட்டுப் பயணம் செய்ய வாய்ப்புக் கிடைத்தால் யாருக்கு தான் கசக்காது? மிகவும் அழகான ஆடம்பரமான துபாய்க்கு ஐஆர்சிடிசியின் அருமையான டூர் பேக்கேஜ்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 16, 2024, 07:23 PM IST
  • துபாய் மற்றும் அபுதாபிக்கு டூர் பேக்கேஜ்
  • ஐஆர்சிடிசியின் அற்புதமான டூர் பேக்கேஜ்
IRCTC: துபாயை சுற்றிப் பார்க்க போலாமா? குறைந்த விலையில் சூப்பர் ஆஃபர் தரும் பேக்கேஜ் title=

ரயிலில் பயணம் செய்வதற்காக ஐஆர்சிடிசி பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போது வெளிநாடுகளுக்கும் ஐஆர்சிடிசி பல பயணத் திட்டங்களை அறிவித்து வருகிறது. அண்மையில் துபாய் மற்றும் அபுதாபியை சுற்றிப் பார்க்க விரும்புபவர்களுக்கு ஐஆர்சிடிசியின் அற்புதமான டூர் பேக்கேஜ் வெளியாகியுள்ளது. மிகவும் மலிவான விலையில் துபாய்க்கு செல்ல அற்புதமான வாய்ப்பு இது.

துபாய்க்கு செல்ல விரும்புபவர்களுக்கு குறைந்த செலவில் தங்குமிடம் மற்றும் உணவுடன் துபாயின் பல முக்கிய இடங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் (IRCTC) மூலம் துபாய் மற்றும் அபுதாபியில் பல இடங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. இத்துடன், புர்ஜ் கலீஃபா போன்ற மிக உயரமான கட்டிடத்தைப் பார்க்கும் செலவும் இதில் அடங்கும்.

மேலும் படிக்க | பங்குச்சந்தை முதலீடு மூலம் கோடீஸ்வரனாக... நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை!

இந்த பயணத் திட்டத்திற்கான பேக்கேஜ், லக்னோவில் இருந்து தொடங்கும், மொத்தம் 6 பகல் மற்றும் 5 இரவுகள் தங்கும் இந்தத் திட்டம் ஜனவரி 24 அல்லது பிப்ரவரி 29 முதல் தொடங்கும். இதில் காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவுக்கான வசதியும் உண்டு.

4 நட்சத்திர ஓட்டல்களில் தங்கும் வசதி கொடுக்கும் இந்தத் திட்டம், லக்னோவிலிருந்து துபாய் சென்று மீண்டும் லக்னோ வரை வருவதற்கான முழு செலவும் இந்தத் திட்டத்தில் அடங்கும். பயணிகளுடன் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) சார்பில் சுற்றுலா மேலாளரும் செல்வார்.

மேலும் படிக்க | அந்தமான் நிகோபார் டூர் போக பிளானா... IRCTC வழங்கும் அசத்தல் டூர் பேக்கேஜ்!

80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பயணக் காப்பீடும் உண்டு. இந்த துபாய் பயண பேக்கேஜ், ஒரு நபருக்கு ரூ.1,29,300 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுவே இரண்டு பேராக இருந்தால், நபர் ஒன்றுக்கு ரூ.1,07,500 கட்டணம் என்பதும், மூன்று பேராக டிக்கெட் புக் செய்தால் நபர் ஒருவருக்கு ரூ.1,06,800 செலுத்த வேண்டும்.

அதேபோல, இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) இரவில் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு புதிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.  அனைத்து பயணிகளின் வசதியை உறுதி செய்யும் வகையில் இந்த புதிய வழிகாட்டுதல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இரவு 10 மணிக்கு மேல் ரயிலில் பயணம் செய்பவர்கள் இந்த வழிகாட்டுதல்களை மனதில் கொள்ள வேண்டும்.

IRCTC-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் டூர் பேக்கேஜ் குறித்த அனைத்து தகவல்களையும் பெறுவீர்கள். ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.irctctourism.com என்ற தளத்தில் இந்த டூர் பேக்கேஜை முன்பதிவு செய்யலாம். இது தவிர உங்கள் உள்ளூர் IRCTC அலுவலகத்திற்குச் செல்லலாம்.

மேலும் படிக்க | Ram temple: அயோத்தி ராமர் கோவிலுக்கு இதுவரை எவ்வளவு நன்கொடை கிடைத்துள்ளது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News