பணப்பிரச்சனை என்பது எல்லோரது வாழ்விலும் இருக்கிறது. எப்படி தான் திட்டமிட்டு பணத்தை செலவழித்தாலும் எகிறும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் நிதிப் பிரச்சனையில் சிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர். உதாரணமாக, திருமணம், கல்வி, வீடு கட்டுதல் ஆகியவற்றுக்காக கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிடுகிறது.
அப்போது தனிநபர் கடனை தேடும் மக்கள், சில விஷயங்களை மறந்துவிடுகிறார்கள். அது பின்னாளில் அவர்கள் இஎம்ஐ செலுத்துவதை பாதிக்கிறது. கடன் வாங்கும்போது நீங்கள் தெளிவாக இருந்தால் இஎம்ஐ செலுத்துவதை 3 வழிகளில் குறைக்கலாம்.
ஒப்பீடு அவசியம்
நம்மில் பெரும்பாலானவர்கள் கடன் வாங்குவதை விரும்பாதவர்களாக இருந்தாலும், சில பல நிர்ப்பந்தத்தால், கடன் வாங்க வேண்டியுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், கடன் வாங்கும்போது அனைத்து வங்கிகளின் வட்டி விகிதங்களையும் ஒப்பீடு செய்ய வேண்டும். அப்போது, வங்கிகள், சிறுகுறு நிதி நிறுவனங்கள் கொடுக்கும் கடனுக்கான வட்டி விகிதங்களில் இருக்கும் வேறுபாடு உங்களுக்கு தெரியவரும். அப்போது உங்களுக்கு ஏற்றார்போல் குறைவாக இருக்கும் வங்கியில் கடனை வாங்கலாம். சில நிறுவனங்கள் கொடுக்கும் சலுகையால் இஎம்ஐ செலுத்துவது கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது.
மேலும் படிக்க | EPFO ஊழியர்களுக்கு கிடைக்கப்போகும் 1 லட்சம் ரூபாய்! முழு தகவல்!
சர்வீஸ் சார்ஜ்
நீங்கள் எப்போதாவது கடன் வாங்கியிருந்தால், செயலாக்கக் கட்டணத்தை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள். உண்மையில், வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுக்கும்போது, அந்தக் கடன் தொகையிலிருந்து சில பணம் செயலாக்கக் கட்டணம் என்ற பெயரில் கழிக்கப்படும். நீங்கள் செய்ய வேண்டியது, கடன் பெறும் வங்கி மற்றும் பிற வங்கிகளின் செயலாக்கக் கட்டணத்தைக் கண்டறிந்து, அது குறைவாக உள்ள இடத்திலிருந்து நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
இஎம்ஐ ஆண்டுகளை ஒப்பிடுக
தனிநபர், வீடு அல்லது கார் கடன் போன்றவற்றை நாம் எடுக்கும் போதெல்லாம், கடனைத் திருப்பிச் செலுத்த வங்கி கால அவகாசம் அளிக்கிறது. வாடிக்கையாளர் ஒவ்வொரு மாதமும் வங்கியில் ஒரு குறிப்பிட்டதேதியில் குறிப்பிட்ட தொகையை EMI-ஆக செலுத்த வேண்டும். இதுபோன்ற சூழ்நிலையில், அனைத்து வங்கிகளின் இஎம்ஐ மொத்தம் எத்தனை என்பது உள்ளிட்ட தகவல்களையும் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.
மேலும் படிக்க | இந்த வங்கிகளில் லோன் வாங்க போறீங்களா? ஒரு நிமிஷம் இதை படிங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ