நடந்து முடிந்த கர்நாட்டக சட்டமன்ற தேர்தலில் பாஜக 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களிலும் வெற்றிப்பெற்றன. இதனையடுத்து கர்நாடகாவில் பாஜக-விற்கு எதிராக ஆட்சியமைக்க காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் இணைந்து ஆட்சி அமைக்கிறது.
கர்நாடகாவின் முதல்வராக மதச்சார்பற்ற ஜனதா தளம் மாநில தலைவர் HD குமாரசாமி புதன் அன்று முதல்வராக பதவியேற்கின்றார். இந்நிலையில், குமாரசாமி பதவியேற்பு விழா குறித்து ஆலோசணை மேற்கொள்ள, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரரை டெல்லியில் இன்று சந்தித்து பேசவுள்ளார்.
இந்நிலையில், இது குறித்து பாஜக தலைவர் அமித்ஷா கூறும்போது..!
கர்நாடகாவில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. கர்நாடக மக்கள் நம்பிக்கையில் அடிப்படையில் பாஜகவிற்கு தான் ஓட்டளித்தனர். எனவே, கர்நாடகாவில் ஆட்சியமைக்கும் அனைத்து உரிமையும் பாஜகவுக்கு உள்ளது. ஜனநாயகத்தை நாங்கள் எந்த விதத்திலும் மீறவில்லை; தார்மீக அடிப்படையிலேயே ஆட்சி அமைக்க உரிமை கோரினோம். குதிரை பேரத்தில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றார்.
தற்போது, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளது மக்களை ஏமாற்றும் செயலாகும். முதல்வராக இருந்த சித்தராமைய்யாவே ஒரு தொகுதியில் தோற்றுள்ளார். இதனை காங்கிரஸ் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.
ஆகவே, இந்தக் கூட்டணி நிலையான ஒன்றாக இருக்காது. யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் கர்நாடகாவில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்றார்.