224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு அடுத்த வாரம் தேர்தல் நடைபெற உள்ளதால், அனல் பறக்கும் [பிரசாரத்தால், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது. இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில், கர்நாடகவுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக-வின் முதல்வர் வேட்பாளரும், கட்சியின் மாநில தலைவருமான பி.எஸ்.எடியூரப்பா இன்று வெளியிட்டுள்ளார்.
Provide free sanitary napkins to BPL women and girl students and at Rs. 1 for other women under the new “Stree Suvidha Scheme.”
Launch the “Mukhya Mantri Smartphone Yojane” to provide women from Below Poverty Line (BPL) families with free smartphones#BJPVachana4Karnataka pic.twitter.com/KRte5NnpfN
— BJP Karnataka (@BJP4Karnataka) May 4, 2018
அந்த அறிக்கையில் கூறியதாவது:-
> ரூ.1 லட்சம் வரையிலான விவசாய கடன் தள்ளுபடி,
> வறுமைக் கோட்டுக்கு கீழேயுள்ள குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு இலவச ஸ்மார்ட் போன்
> பெண்கள் திருமணத்திற்கு தாலி செய்ய 3 கிராம் தங்கம்
> பெண்கள் திருமணத்திற்கு உதவித் தொகையாக ரூ.25,000 வழங்கப்படும்.
> வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு சானட்டரி நாப்கின்கள் ரூ. 1 வழங்கப்படும்
> ரூ.1.5 லட்சம் கோடிக்கு நீர்ப்பாசனத் திட்டம்
> குறைந்த விலையில் தரமான உணவுகள் வழங்க அன்னபூர்ணா கேண்டீன்கள் திறக்கப்படும்
> 2 எய்ம்ஸ் மருத்துவமனைகள் கர்நாடகவில் அமைக்கப்படும்
> பாரம்பரிய தொழில்களை ஊக்கப்படுத்தும் விதமாக மாதம்தோறும் ஊக்கத்தொகை வழங்கப்படும், அதற்காக ரூ. 1000 கோடி ஒதுக்கப்படும்.
> பசுவதைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
இவ்வாறு பல கவர்ச்சி திட்டங்களை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.