வெடிக்கும் போராட்டம்! தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அ.குமரெட்டியபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர் போராட்டத்தினை நடத்தி வருகின்றனர். 

Last Updated : May 22, 2018, 09:07 AM IST
வெடிக்கும் போராட்டம்! தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு!! title=

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அ.குமரெட்டியபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர் போராட்டத்தினை நடத்தி வருகின்றனர். 

இதையொட்டி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்துக்கு ஆதரவாக பல்வேறு வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்துகின்றனர். இதனால் போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  அவர்களில் 2 ஆயிரத்திற்கும் கூடுதலான மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.  

மேலும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், தூத்துக்குடியின் பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பினர், அரசியல் கட்சிகள், வணிகர்கள், மீனவர்கள் நாளை முற்றுகை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. போராட்டங்கள் எதிரொலியாக தூத்துக்குடி தெற்கு மற்றும் சிப்காட் காவல்நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் நேற்றிரவு முதல் நாளை காலை 8 மணிவரை 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Trending News