27 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த பச்சன் & கபூர் :"102 நாட் அவுட்" ட்ரைலர்

அமிதாப் பச்சன் மற்றும் ரிஷி கபூர் நடிப்பில் உருவாகி வரும் "102 நாட் அவுட்" படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.

Last Updated : Mar 28, 2018, 04:25 PM IST
27 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த பச்சன் & கபூர் :"102 நாட் அவுட்" ட்ரைலர் title=

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் ரிஷி கபூர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் "102 நாட் அவுட்". 27 வருடங்களுக்கு பிறகு அமிதாப் பச்சன் மற்றும் ரிஷி கபூர் சேர்ந்து நடித்துள்ளனர். இந்த படத்தை உமேஷ் சுக்லா இயக்குகிறார். கதை சௌமியா ஜோஷி எழுதியுள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருக்கிறார். 

இதன் கதைக்களம் ‘102 நாட் அவுட்’ என்ற குஜராத்தி காமெடி நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் 75 வயதான மகனாக ரிஷி கபூரும், 102 வயதுடைய தந்தையாக அமிதாப் பச்சனும் நடிக்கின்றனர்.

அமிதாப் பச்சன் மற்றும் ரிஷி கபூர் சேர்ந்து "கபீ கபீ (1976), அமர் அக்பர் அந்தோனி (1977), நசீப் (1981), கூலி (1983) மற்றும் அஜூபா (1991) போன்ற மறக்கமுடியாத படங்களில் நடித்துள்ளனர்.

ஏற்கனவே, இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது. "102 நாட் அவுட்" படத்தின் ட்ரைலர் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இப்படம் மே மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

Trending News