அரசியல் வாழ்க்கைக்கு முற்றுபுள்ளி வைக்கும் யஷ்வந்த் சின்ஹா!

முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா பா.ஜ.க-வில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்!

Last Updated : Apr 21, 2018, 04:59 PM IST
அரசியல் வாழ்க்கைக்கு முற்றுபுள்ளி வைக்கும் யஷ்வந்த் சின்ஹா!  title=

பாஜக-வின் மூத்த தலைவரான யஷ்வந்த் சின்ஹா, வாஜ்பாய் அமைச்சரவையில் நிதியமைச்சராக செயலாற்றி வந்தார். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த யஷ்வந்த் சின்ஹா, பிரதமர் மோடியும் அவரது நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் சேர்ந்து இந்தியப் பொருளாதாரத்தையே சிதைத்து விட்டார்கள் என கூறினார்.  

இதைதொடர்ந்து, பல்வேறு பாரதீய ஜனதா தலைவர்கள் அவருக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்தனர். இதையடுத்து, மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை யஷ்வந்த் சின்ஹா கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் பா.ஜ.க-வில் இருந்து விலக போவதாக அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் வேறு எந்த கட்சியிலும் சேரப் போவதில்லை என்றும் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

பாட்னாவில் உள்ள ராஷ்டிர மஞ்ச் அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் இன்று நான் எல்லாவிதமான கட்சி அரசியலில் இருந்து ஓய்வு பெற போவதாகவும், இன்று நான் பாஜக-வுடன் இருந்த அனைத்து உறவுகளையும் முடித்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். 

இந்த கூட்டத்தில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லல்லுபிரசாத் யாதவ் மற்றும் காங்கிரஸ் தலைவர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Trending News