Sister On Rent: ஒன்றாக நேரத்தை செலவிட உங்களுக்கான சகோதரி வாடகைக்கு எடுக்கலாம்!

Sister On Rent in Japan: தனிமையால் அவதிப்படுபவர்களுக்கு உதவ, ஜப்பானில் சிறப்பு சேவை வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு சேவையின் கீழ் இளைஞர்கள் தங்கள் சகோதரிகளை வாடகைக்கு எடுக்கலாம். 

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 15, 2022, 08:55 PM IST
  • சிலர் தனிமை மற்றும் மனச்சோர்வு போன்ற கடுமையான நோய்களுடன் போராடுகிறார்கள்.
  • தனிமையால் அவதிப்படுபவர்களின் துன்பத்தைப் போக்க ஜப்பானில் ஒரு சுவாரஸ்யமான வழி.
  • இளைஞர்கள் ஹிக்கிகோமோரி என்ற மூளைப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Sister On Rent: ஒன்றாக நேரத்தை செலவிட உங்களுக்கான சகோதரி வாடகைக்கு எடுக்கலாம்! title=

ஜப்பானில் தங்கையை வாடகைக்கு விடுங்கள்: மகிழ்ச்சியான குடும்ப கலாச்சாரம் இப்போது வெறும் காட்சி படங்களில் மட்டுமே இருக்கும் அளவுக்கு குறைந்து வருகிறது. காலம் மற்றும் வயதுக்கு ஏற்ப சிலர் தங்களை தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள். ஒரு குடும்பம் பல்வேறு காரணங்களால் பிளவுபடுகிறது. அதன் காரணமாகவும் தனிமையாக இருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஆனால் குடும்பமாக ஒன்றாக வாழும் போதுக்கூட சிலர் தனிமை மற்றும் மனச்சோர்வு (Depression) போன்ற கடுமையான நோய்களுடன் போராடுகிறார்கள். தனிமையைக் கடக்க பல நேரங்களில் இளைஞர்கள் கேஜெட்கள் மற்றும் செல்லப்பிராணிகளின் உதவியை நாடுகிறார்கள். ஆனாலும் பல நேரங்களில் அவர்களால் மனச்சோர்வைக் கடந்து வெளியே வரமுடிவதில்லை. இப்படிப்பட்ட தனிமையால் அவதிப்படுபவர்களின் துன்பத்தைப் போக்க ஜப்பானில் ஒரு சுவாரஸ்யமான வழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் சிறப்பு சேவை
தனிமையால் அவதிப்படுபவர்களுக்கு உதவ, ஜப்பானில் சிறப்பு சேவை வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு சேவையின் கீழ் இளைஞர்கள் தங்கள் சகோதரிகளை வாடகைக்கு எடுக்கலாம். ஆம், இப்படி வாடகைக்காக பணியாற்ற வரும் இந்த சகோதரிகள் நீங்கள் குடும்பத்துடன் ஒன்றாக இருப்பதை போல உங்களை உணரவைப்பார்கள். இதன் காரணமாக அவர்களின் தனிமை நீங்குகிறது. செல்போன், கேம் உட்பட பல சாதனங்களில் தொடர்ந்து மூழ்கி கிடக்கும் பல இளைஞர்கள் விடுதலை பெறுகிறார்கள். குறிப்பாக ஒன்றை ஆண் மகனை பெற்றவர்களுக்கு இது ஒரு ஆறுதலான விசியமாக உள்ளது.

மேலும் படிக்க: Benefits of Brisk Walk: மன அழுத்தத்தை குறைக்கும் வேகமான வாக்கிங்

சகோதரிகளை வாடகைக்கு எடுக்கலாம்
ஜப்பானிய இளைஞர்கள் ஹிக்கிகோமோரி (Hikikomori) என்ற மூளைப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மனநிலையில், இளைஞர்கள், குறிப்பாக ஆண்கள், சமூகத்திலிருந்து முற்றிலும் விலகிக்கொண்டு, வீட்டை விட்டு வெளியே வர விரும்புவதில்லை. இதனால் பல மாதங்கள், சில சமயம் வருடக்கணக்கில் பள்ளிக்கு செல்வதில்லை, நடைபயிற்சி செல்வதில்லை, ஏன் தனக்கான பொருட்களை வாங்க கூட வெளியே வருவதில்லை. அவர்கள் மொபைல் கேம்கள் அல்லது இணையத்தின் மூலம் தங்கள் சொந்த உலகத்தை உருவாக்கி கொள்கிறார்கள். 

உதவிக்கரம் நீட்டும் "ட்ரீம் ஸ்டார்ட்" நிறுவனம்
அப்படிப்பட்டவர்களை மன அழுத்தத்திலிருந்து வெளியே கொண்டு வர ஜப்பானில் சகோதரிகள் பணியமர்த்தப்படுகிறார்கள். இளைஞர்களின் இத்தகைய நிலைமையை பார்த்து என்ன செய்வது என்று தெரியாமலும், யாரிடமும் சொல்ல முடியாமலும் பெற்றோர்கள் தவிக்கின்றனர். தங்கள் குழந்தைகளின் சிகிச்சைக்கான வழிகளைத் தேடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு "ட்ரீம் ஸ்டார்ட்" (Dream Start) என்ற ஜப்பானிய நிறுவனம் உதவிக்கரம் நீட்டியது. பிபிசி 2019 ஆம் ஆண்டில் ஒரு ஆவணப்படத்தை உருவாக்கியது. அதில் வாடகை சகோதரிகளின் விவரங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டன.

மேலும் படிக்க: இங்கு ‘வாடகைக்கு பாய்பிரண்ட்’ கிடைக்கும்... வெறும் ₹ 300 மட்டும்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News