கணவனின் பிணத்துடன் குடும்பம் நடத்திய அமானுஷ்ய பெண்... அதுவும் 4 வருஷமாக... காரணம் என்ன?

World Bizarre News: ரஷ்யாவில் மனைவி ஒருவர், நான்கு ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த தனது கணவரின் உடலை கட்டிலிலேயே வைத்திருந்த பகீர் சம்பவத்தை இதில் விரிவாக காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Feb 7, 2024, 07:47 PM IST
  • இந்த ஜோடிக்கு மொத்தம் 4 குழந்தைகள்.
  • இந்த கணவர் அசாதாரணமான முறையில் உயிரிழந்துள்ளார்.
  • எகிப்து மம்மிகளுக்கு செய்யும் சடங்குளை அந்த பெண் தனது கணவருக்க செய்துள்ளார்.
கணவனின் பிணத்துடன் குடும்பம் நடத்திய அமானுஷ்ய பெண்... அதுவும் 4 வருஷமாக... காரணம் என்ன? title=

World Bizarre News: ரஷ்ய நாட்டில் ஒரு பெண் செய்த பகீர் சம்பவத்தை இங்கு காணலாம். 50 வயதான ஸ்வெட்லானா என்ற பெண் வெளியுலகத்தில் யாருக்கும் தெரியாமல் சுமார் 4 வருடங்களாக தனது கணவனின் உடலை, கட்டிலில் வைத்து சடங்குகளை செய்து வந்துள்ளார். மேலும், இதுகுறித்து வெளியில் யாரிடமோ கூறினால் குழந்தைகளை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்துவிடுவதாக கூறி மிரட்டியும் உள்ளார். 

49 வயதான விளாமிதிர் என்பவர் அவரின் வீட்டில் சுமார் நான்கு வருடங்களுக்கு உயிரிழந்தார். அதாவது, கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அன்று கணவன் - மனைவி ஆகிய இருவருக்கும் கடும் வாக்குவாதமும், சண்டையும் நடந்துள்ளது. வாக்குவாதத்தின் போது, நீங்கள் செத்துவிடுவீர்கள் என்று சாபமிட்டுள்ளார்.

சாபமிட்ட மனைவி... உயிரிழந்த கணவன் 

மனைவி சாபமிட்ட சில மணிநேரத்திலேயே கணவர் மயங்கிவிழுந்துள்ளார். கணவர் தன்னிடம் நடிக்கிறார் என முதலில் மனைவி நினைத்துள்ளார். பின்னரே, அவர் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது. கொஞ்சம் நேரத்தில் அவரது மூத்த மகள், தந்தை குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். அப்போது, அந்த விளாமிதிரின் உடல் போர்வையால் போர்த்தப்பட்டு, ஸ்வெட்லானாவின் அறையில் வைக்கப்பட்டிருந்திருக்கிறது. 

மேலும் படிக்க | பாஸ்போர்ட் இருந்தா போதும்! எங்க ஊரை சுத்திப் பார்க்க வாங்க! இந்தியர்களை வரவேற்கும் ஈரான்!

இதனை பார்த்த தங்களின் குழந்தைகளிடம் இதனை வெளியே சொல்லக்கூடாது என்றும் சொன்னால் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்துவிடுவேன் என்றும் மிரட்டியிருக்கிறார். இந்த ஜோடிக்கு 17 வயதில் ஒரு மூத்த மகளும், 8 வயதில் ஒரு மற்றொரு மகளும் உள்ளனர். மேலும், 11 வயதில் இரட்டையர்களான மகன்கள் என மொத்தம் 4 பேர் உள்ளனர். 

எகிப்திய சடங்குகள் 

சில நாள்களுக்கு முன்னர், அவரின் வீட்டின் குழந்தைகளை பார்வையிட வந்த சமூக பணியாளர் ஒருவர் வீட்டில் மறைத்து வைத்திருக்கும் அவர்களின் தந்தையின் உடலை கண்டுபிடித்துள்ளார். அவர்களின் வீட்டிற்கு 2021ஆம் ஆண்டில் இருந்து பல விருந்தினர்களும், உறவினர்களும் வந்திருந்தாலும் யாருக்கும் இந்த விஷயம் தெரிந்திருக்கவில்லை.

தொடர்ந்து, போலீசார் அந்த வீட்டை முழுமையாக சோதனை செய்த போது விளாதிமிர் உடலின் காலடியில் இருந்த எகிப்திய சிலுவை, விலங்குகளின் மண்டை ஓடுகள், தாயத்துக்கள் உட்பட பல அமானுஷ்ய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் தொடர்ந்து பல சடங்குகளை செய்து வந்துள்ளார். 
இதுகுறித்து கேட்டதற்கு, விளாதிமிரின் ஆசைப்படியே இதையெல்லாம் செய்ததாகவும் கூறப்படுகிறது. ஸ்வெட்லானா தனது கணவனின் உடலை வைத்து எகிப்தியர்களின் சடங்கை தொடர்ந்து செய்து வந்துள்ளார். அதாவது, மம்மிகளுக்கு மேற்கொள்ளப்படும் சடங்கை போன்று செய்துள்ளார்.

மற்றவர்களை எப்படி சமாளித்தார்?

மேலும், அந்த வீட்டின் படுக்கையறைகளில் ஒன்று ஒரு தற்காலிக சடங்கு செய்யும் அறையாக மாற்றப்பட்டுள்ளது. அந்த அறையில், குற்றநரி தலையுடைய பண்டைய எகிப்து கடவுளாக அறியப்படும் அனுபிஸை வணங்கும் இடமாக மாற்றப்பட்டு, விளாதிமிருக்கான சடங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  

இவை மட்டுமின்றி, பொதுமக்களின் கேள்விகளிடம் இருந்து தப்பிக்கவும் அந்த ரஷ்ய பெண் நல்ல கதை ஒன்றையும் தயார் செய்து வைத்துள்ளார். விளாதிமிருக்கு ஏற்கெனவே காலில் சில மருத்துவ ரீதியிலான பிரச்னைகள் இருந்திருக்கிறது, அதாவது அந்த கடும் குளிரிலும் அவரால் ஷூ அணிய முடியாத அளவிற்கு காலில் பிரச்னை இருந்துள்ளது. 

இந்த நோயை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட அந்த பெண், இந்த நோயக்கு மாற்று வழியில் சிகிச்சை பெற தனது கணவர் திபேத்திற்கு சென்றிருப்பதாக அனைவரிடமும் கூறியுள்ளார். தற்போது விளாதிமிரின் உடல் அதிகாரிகளால் மீட்கப்பட்ட பின்னர், அவரது மனைவிக்கு மனநலப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், அவர்களின் நான்கு குழந்தைகளுக்கும் தீவிர மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

மேலும் படிக்க | அதிசயம்! 5 ஆண்டுகள் கோமாவில் இருந்த பெண்... குணமாக்கிய தாயின் ஜோக்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News