Bing search engine: தேடுபொறியில் 'Tank Man' காணாமல் போன மர்மம் என்ன bill gates?

'Tank Man' புகைப்படம் 1989 ஆம் ஆண்டின் சிறந்த புகைப்படம் என்று விருது பெற்ற புகைப்படம் இணையத்தில் காணாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 5, 2021, 02:00 PM IST
  • பெய்ஜிங்கின் தியனன்மென் சதுக்கத்தில் சீன ராணுவத்தின் டாங்கிகளுக்கு முன்னால் ஒருவர் நிற்கும் புகைப்படம் டேங்க் மேன் புகைப்படம் என்று பிரபலமனது
  • 1989 ஆம் ஆண்டின் சிறந்த புகைப்படம் என்று விருது பெற்ற புகைப்படம் டேங்க் மேன்
  • தேடுபொறியில் 'Tank Man' காணாமல் போன மர்மம் என்ன bill gates?
Bing search engine: தேடுபொறியில் 'Tank Man' காணாமல் போன மர்மம் என்ன bill gates? title=

புகழ்பெற்ற தியனன்மென் சதுக்கத்தின் 'Tank Man' போராட்டத்திற்கான புகைப்படத் தேடல்கள் மைக்ரோசாப்ட் தேடுபொறி Bing-ல் வெள்ளிக்கிழமை (ஜூன் 04, 2021) காணாமல் போனது. கொடிய ஒடுக்குமுறையின் ஆண்டு நினைவு நாளில் புகைப்படம் தணிக்கை செய்யப்பட்டது உலகெங்கிலும் கவலைகளை எழுப்பின.

'Tank Man' புகைப்படம் 1989 ஆம் ஆண்டின் சிறந்த புகைப்படம் என்று விருது பெற்ற புகைப்படம் இணையத்தில் காணாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தேடுபொறி Bing-ஐ பயன்படுத்தி சீனாவிற்கு வெளியே கூட டேங்க் மேன் புகைப்படம் அல்லது வீடியோ தேடல்களில் எதுவும் கிடைக்கவில்லை. ஆன்லைனில் என்ன இருக்கவேண்டும், எது இருக்கக்கூடாது என்பதை தீவிரமாக கட்டுப்படுத்தும் நாடு சீனா என்பது குறிப்பிடத்தக்கது.  

ஆனால் இது பற்றி தேடுபொறி Bingஇன் உரிமையாளர் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் என்ன சொல்கிறது? "இது ஒரு தற்செயலான மனித பிழையின் காரணமாகும், இதைத் தீர்க்க நாங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம்" என்று மைக்ரோசாப்ட் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அமெரிக்க பத்திரிகைகளில் வெளியான அறிக்கைகளின் அடிப்படையில் AFP செய்தி முகமை எழுப்பிய கேள்விக்கு இந்த தபதில் கிடைத்தது.  

Also Read | நைஜீரியாவில் ட்விட்டருக்கு தடை; அதிரடி நடவடிக்கைக்கான காரணம் என்ன

ஆனால், டேங்க் மேன் என்ற சொல்லை பயன்படுத்தி கூகுளில் தேடும்போது, புகைப்படக் கலைஞர் சார்லி கோல் மற்றும் பிறரின் முக்கியமான புகைப்படங்கள் மற்றும் பிற புகைப்படங்கள் கிடைத்ததாக, வலை போக்குவரத்து பகுப்பாய்வு வலைத்தளம் ஸ்டேட்கவுண்டர்-இன் (Statcounter) கூறுகிறது. ஆன்லைன் வினவல்களுக்கான உலகளாவிய சந்தையில் 92 சதவீதம் அளவு சந்தை கூகுளிடம் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

சீனாவில் கூகுள் தேடல் (Google search) வழங்கப்படவில்லை. அந்த நாட்டின் தணிக்கைகள் டேங்க் மேனை இணையத்திலிருந்து காணாமல் போகடித்துவிட்டன. பைடூ (Baidu) சீனாவில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் தேடுபொறி ஆகும்.

ஜூன் 4, 1989 அன்று தியனன்மென் சதுக்கத்தில் (Tiananmen Square) அமைதியான ஜனநாயக போராட்டங்களை நசுக்கிய சீன துருப்புக்களின் ஆண்டு நிறைவை வெள்ளிக்கிழமை குறிக்கிறது.

Also Read | June 5 in history: சரித்திரத்தில் இன்றைய நாளின் முக்கியத்துவம் என்ன?

ஒடுக்குமுறையில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர், 1,000 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

1989 ஆம் ஆண்டில் பெய்ஜிங்கில் உள்ள தியனன்மென் சதுக்கத்தில் ஒரு நெடுவரிசை பாதையின் நீண்ட பாதையில் செல்லும் டாங்கிகளை வழிமறிக்கும் வெள்ளை சட்டை அணிந்த ஒரு தனி எதிர்ப்பாளர் இடம் பெற்றிருக்கும் புகைப்படம் டேங்க் மேன் (Tank Man) என்ற பெயரில் பிரபலமானது. 

சீனாவின் பிரதான நிலப்பரப்பில், தியனன்மென் ஆண்டுவிழாவன்று ஆன்லைன் தணிக்கை அதிகரிக்கும். ஆண்டுதோறும் அந்த குறிப்பிட்ட நாளன்று பெய்ஜிங்கில் அந்த சதுக்கம் இருக்கும் பகுதியில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும்.  

Also Read | பாகிஸ்தானில் புயலைக் கிளப்பும் கேள்வி ‘ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News