ஆட்சி அதிகாரத்தை உளவுத்துறை தலைவரிடம் ஒப்படைக்கும் புடின்... வெளியான அதிர்ச்சித் தகவல்

ரஷ்ய அதிபர் புற்றுநோய் அறுவை சிகிச்சைக்கு தயாராகி வருவதாகவும், தனது நம்பிக்கைக்கு பாத்திரமான உளவுத் துறை தலைவரிடம் அதிகாரத்தை ஒப்படைக்கக் கூடும் என டெய்லி மெயில் செய்தியை மேற்கோள் காட்டி IANS செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.  

Last Updated : May 2, 2022, 03:16 PM IST
ஆட்சி அதிகாரத்தை உளவுத்துறை தலைவரிடம் ஒப்படைக்கும் புடின்... வெளியான அதிர்ச்சித் தகவல் title=

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே ரஷ்யா உக்ரைன் போர் தொடர்பான பொறுப்புகளையும், அதிகாரத்தையும் தனது நம்பிக்கை பாத்திரமான உளவுத்துறை தலைவரிடம் ஒப்படைப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ரஷிய அதிபர் விளாடிமிர் புடின், புற்றுநோய் அறுவை சிகிச்சைக்கு தயாராகி வருவதால், தனது நம்பிக்கைக்கு மிகவும் பாத்திரமான முன்னாள் FSB தலைவர் நிகோலாய் பட்ருஷேவிடம் (Nikolai Patrushev), உக்ரைன் போர் தொடர்பான அதிகாரத்தையும் பொறுப்புகளையும் ஒப்படைப்பார் என ரஷ்ய நாடாளுமன்றமான கிரெம்ளின் அதிகாரி ஒருவர் கூறினார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உடல் நிலை தொடர்பாக நீண்ட நாட்களாக பல விதமான ஊகங்கள் பல வெளியாகி வந்தது குறிப்பிடத்தக்கது. அவருக்கு  வயிற்றுப் புற்றுநோய் மற்றும் பார்கின்சன் நோய் பாதிப்பால் கடுமையாக அவதிப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது.

மேலும் படிக்க | ரஷ்யா போரில் டால்பின்களை களம் இறக்கியுள்ளதா; அமெரிக்கா வெளியிட்டுள்ள பகீர் தகவல்

ஆனால், குறித்த தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 69 வயதான விளாடிமிர் புடின் இரகசியமாக புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சைக்கு தயாராகி வருவதும் தெரிய வந்துள்ளது.

புடினுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பிறகு சுயநினைவுக்கு வர இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகலாம் என்ற நிலையில், அந்த கால கட்டத்தில் நாட்டின் கட்டுப்பாடு பட்ருஷேவ் இடம் இருக்கும் என்று ரஷ்யா நாடாளுமன்ற வட்டாரம் மேலும் கூறியது.

நிர்வாக அதிகாரத்தை ஒப்படைக்க உள்ள, 70 வயதான உளவுத்துறை தலைவர் நிகோலாய் பட்ருஷேவ் தான் உக்ரைன் போருக்கான சூத்திரதாரி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | மரியுபோல் நகரை கைப்பற்றியதாக அறிவித்தார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்

ரஷ்ய அரசியலமைப்பின் கீழ், அதிகாரம் பிரதமருக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்பதால், அத்தகைய நடவடிக்கை ஆச்சரியத்தை கொடுக்கிறது என டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.

அறுவை சிகிச்சை ஏப்ரல் இரண்டாம் பாதியில் திட்டமிடப்பட்ட நிலையில், மே 9 அன்று  ரஷ்யாவின் இரண்டாம் உலகப் போரின் வெற்றியின் வெற்றி தின நினைவேந்தல் நிகழ்வுக்காக அறுவை சிகிச்சையை தாமதப்படுத்தியதாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, விளாடிமிர் புடினின் உடல் நிலை குறித்து பல விதமான ஊகங்கள் வெளியான நிலையில், புடினுக்கு மருத்துவப் பிரச்சனைகள் எதுவும் இல்லை என்று கிரெம்ளின் எப்பொழுதும் கடுமையாக மறுத்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | உக்ரைன் போரின் தாக்கத்தை உணர்த்தும் மனம் பதற வைக்கும் காட்சிகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News