புதுடெல்லி: சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியுள்ளது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தீவிரவாதிகளின் நாசவேலை மற்றும் தீவைப்பு உட்பட பல வன்முறைகளை கண்டித்த அமெரிக்கா, வன்முறையை "கிரிமினல் குற்றம்" என்று அழைத்தது. ட்விட்டரில் ஜூலை 2, 2023 வெளியிடப்பட்ட காலிஸ்தான் ஆதரவாளர்களின் வீடியோவில், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் தீவைக்கும் செயல் இடம் பெற்றுள்ளது.
வன்முறையால் வன்முறை பிறக்கிறது
அந்த வீடியோவில், ‘வன்முறையால் வன்முறை பிறக்கிறது’ என்ற வாசகத்துடன், கனடாவை தளமாகக் கொண்ட காலிஸ்தான் டைகர் ஃபோர்ஸ் (KTF) தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் மரணம் தொடர்பான செய்திக் கட்டுரைகளும் காட்டப்பட்டுள்ளன.
இந்தியாவின் தேடப்படும் பயங்கரவாதிகளில் ஒருவரான நிஜ்ஜார் தொடர்பாக துப்புக் கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. அவர், கடந்த மாதம் கனடாவில் உள்ள குருத்வாராவிற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய துணை தூதரகத்திற்கு தீவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோ காட்சியில், நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர் ஒருவர் துணை தூதரகம் அருகே எரிபொருளை ஊற்றி பின்னர் தீயிட்டு கொளுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. பின்னர் அப்பகுதி முழுக்க புகை மண்டலமாக காட்சி அளித்தது.
மேலும் படிக்க | பூமியை நெருங்கும் ஆஸ்டிராய்ட் எரிகற்கள்! அண்மையில் அச்சம் ஏற்படுத்திய 5 சிறுகோள்கள்
இதனையடுத்து சான் பிரான்சிஸ்கோ நகரத்தின் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விரைந்து தீ அணைக்கப்பட்டதால் பெருமளவில் சேதம் தவிர்க்கப்பட்டது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை கடும் கணடனத்தை பதிவு செய்துள்ளது.
காலிஸ்தான் ஆதரவாளர்கள் தீவைப்பு தொடர்பான வீடியோவை தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வன்முறைக்கு வன்முறைதான் தீர்வு என்ற வாசகத்துடன் பரப்பி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காலிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய துணை தூதரகத்திற்கு, அதிகாலை 1:30 மணி முதல் 2:30 மணி வரை தீ வைக்கப்பட்டுள்ளது. சான்பிரான்சிஸ்கோ தீயணைப்புத் துறையினர் அதை விரைவாக அணைத்தனர்.
உண்மைத்தன்மை சரிபார்ப்பு
வீடியோவின் நம்பகத்தன்மையை Zee News சுயாதீனமாக சரிபார்க்கவில்லை. செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது.
United States | A group of Khalistan radicals on July 2 set Indian Consulate on fire in San Francisco. The fire was suppressed quickly by the San Francisco Fire Department. No major damages or staffers were harmed. Local, state and federal authorities have been notified. The US… pic.twitter.com/uhx9NtML5G
— ANI (@ANI) July 4, 2023
"சனிக்கிழமை சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு எதிராக அறிவிக்கப்பட்ட காழ்ப்புணர்ச்சி மற்றும் தீக்குளிப்பு முயற்சியை அமெரிக்கா கடுமையாக கண்டிக்கிறது. அமெரிக்காவில் உள்ள இராஜதந்திர வசதிகள் அல்லது வெளிநாட்டு தூதர்களுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சி அல்லது வன்முறை ஒரு கிரிமினல் குற்றம், ”என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் திங்களன்று ஒரு ட்வீட்டில் தெரிவித்தார்.
மேலும் படிக்க | கிரிப்டோ கரன்சி மூலம் தீவிரவாதத்தை இந்தியாவில் வேரூன்ற முயற்சிக்கும் ISIS
அமெரிக்காவில் உள்ள தெற்காசிய ஒளிபரப்பு தொலைக்காட்சி நெட்வொர்க்கான தியா டிவி, "ஞாயிறு அதிகாலை 1:30-2:30 மணிக்கு சான் பிரான்சிஸ்கோ இந்திய துணைத் தூதரகத்தில் தீ விபத்து ஏற்பட்டது" என்று ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
"சான் பிரான்சிஸ்கோ துறையால் தீ விரைவாக அணைக்கப்பட்டது, சேதம் குறைவாக இருந்தது மற்றும் ஊழியர்கள் யாரும் காயமடையவில்லை. உள்ளூர், மாநில மற்றும் மத்திய அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்,” என்று அது கூறியது. தீ வைப்புத் தாக்குதலின் வீடியோவையும் அந்த நிலையம் வெளியிட்டது.
ஜூலை 8 ஆம் தேதி கலிபோர்னியாவின் பெர்க்லியில் தொடங்கி சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் முடிவடையும் "காலிஸ்தான் சுதந்திரப் பேரணி" நடைபெறும் என்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு போஸ்டர் கூறுகிறது.
மேலும் படிக்க | இந்தியாவும் சீனாவும் பாங்காங் த்சோ ஏரிக்கு அருகில் உள்கட்டமைப்பை அதிகரிக்கின்றன
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ