அமெரிக்காவில் முக்கியமான இடைத் தேர்தலுக்கு முன்னதாக, ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான சாத்தியம் குறித்து உக்ரைன் அதிபர் சூசகமாக தெரிவித்துள்ளார். முன்னதாக அதிபர் விளாடிமிர் புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்த மறுத்த நிலையில், இப்போது தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். வோலோடிமிர் ஜெலென்ஸ்கி திங்கள்கிழமை சர்வதேச சமூகத்திற்கு விடுத்த செய்தியில் "உண்மையான அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யாவை கட்டாயப்படுத்த வேண்டும்" என்று வலியுறுத்தினார். மேலும், பேச்சுவார்த்தைக்கான தனது வழக்கமான நிபந்தனைகளை பட்டியலிட்டார். அவை உக்ரைனின் அனைத்து ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களையும் திரும்பப் பெறுதல், போரினால் ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு மற்றும் போர்க்குற்றங்களைத் தீர்ப்பது ஆகியவை அடங்கும்.
புட்டினுடன் "பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியமே இல்லை" என்று செப்டம்பர் மாத இறுதியில் ஒரு ஆணையில் கையெழுத்திட்ட உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தற்போது பேச்சுவார்த்தைக்கு முன்வருவது குறிப்பிடத்தக்கது. மேற்கத்திய ஆயுதங்கள் மற்றும் பிற உதவிகள் ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்த்துப் போராடுவததில், உக்ரைனுக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது என்றால் மிகையில்லை. ஆனால் செவ்வாயன்று அமெரிக்க இடைக்கால தேர்தல்கள் முடிவுகள், உக்ரேனுக்கான வாஷிங்டனின் எதிர்கால அரசியல் மற்றும் நிதி ஆதரவை மாற்ற அமைக்கக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளதால், உக்ரைன் அதிபர் பேச்சுவார்த்தைக்கு முன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | உக்ரைனில் இருந்து உடனடியாக இந்தியர்கள் வெளியேறவும்: இந்திய தூதரகம் அறிவுறுத்தல்
குடியரசுக் கட்சியினர் நாடாளுமன்ற தொகுதிகலை வென்றால், ஜனாதிபதி ஜோ பிடனின் நிர்வாகம் உக்ரைனுக்கான இராணுவ மற்றும் பிற உதவிகளை அதிக அளவில் வழங்குவது எளிதாக இருக்காது. ரஷ்யா மற்றும் உக்ரைன் போரின் ஆரம்பத்தில் பெலாரஸ் மற்றும் துருக்கியில் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியது. மார்ச் மாதம் இஸ்தான்புல்லில் நடந்த தூதுக்குழுக்களின் கடைசிக் கூட்டத்தில் எந்த முடிவும் ஏற்படாததால் பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பித்தன.
இந்நிலையில், ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சர் , ஆண்ட்ரி ருண்டன்கோ செவ்வாயன்று, உக்ரைனுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு மாஸ்கோ எந்த நிபந்தனைகளையும் அமைக்கவில்லை என்று வலியுறுத்தினார்.
மேலும் படிக்க | அணு ஆயுத தாக்குதல் அச்சம்; அயோடின் மாத்திரைகளை வாங்கி குவிக்கும் உக்ரேனியர்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ