UK: 660,000 வேலைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் திட்டம் என்ன?

பசுமை உள்கட்டமைப்பு மற்றும் வேலைகளில் முதலீடு செய்யும் தொகையில் மற்ற நாடுகளை விட இங்கிலாந்து தொடர்ந்து பின்வாங்குகிறது. விளைவு? 660,000 வேலைவாய்ப்புகளுக்கு பாதிப்பு

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Sep 12, 2021, 04:27 PM IST
UK: 660,000 வேலைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் திட்டம் என்ன? title=

சனிக்கிழமையன்று வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்று பல்வேறு அச்சங்களையும் கேள்விகளையும் எழுப்புகிறது. பசுமை உள்கட்டமைப்பு மற்றும் வேலைகளில் முதலீடு செய்யும் தொகையில் மற்ற நாடுகளை விட இங்கிலாந்து தொடர்ந்து பின்வாங்குகிறது. இதனால் 660,000 என்ற மிகப்பெரிய எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகள் கடுமையான ஆபத்தை எதிர்நோக்கும் என்று தெரியவந்துள்ளது.

போரிஸ் ஜான்சனின் தலைமையிலான இங்கிலாந்து அரசு, ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாட்டை நடத்துவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளிவந்திருக்கிறது இந்த அறிக்கை. பசுமை முதலீடு மற்றும் தொழில்நுட்பத்தின் முன்னணியில் உள்ள நாடுகளுக்கு நகரும் வேலைகளின் விளைவாக இங்கிலாந்தில் வேலைவாய்ப்பில் ஏற்படும் தாக்கம் அதிகமானதாக இருக்கும்.  

பசுமை முதலீடு மற்றும் வேலைகளில் முதலீடு செய்ததற்காக ஜி 7 பொருளாதாரங்களின் லீக் அட்டவணையில் இங்கிலாந்து ஆறாவது இடத்தில் உள்ளதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

ALSO READ | 'திரை மறைவு போராட்டம்' : பர்தா அணிந்த பெண்கள் தாலிபானுக்கு ஆதரவாக பேரணி

புவி வெப்பமடைதலில் இருந்து பூமியை காப்பாற்றும் பந்தயத்தில் இங்கிலாந்து ஒரு முன்னணி சக்தியாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுவதற்கு இடையில் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது. 

இங்கிலாந்தின் கருவூலம் அடுத்த பத்தாண்டுகளில் பசுமை மீட்பு மற்றும் வேலைகளில் ஒரு நபருக்கு சுமார் £ 180 மட்டுமே முதலீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம், அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அமெரிக்காவில் ஒரு பசுமை மீட்புக்கு நபருக்கு 2,960 யூரோக்களுக்கு மேல் ஒதுக்க திட்டமிட்டுள்ளார்.

READ ALSO | விண்வெளியில் ஒலித்த Fire Alarm; விண்- உலா போன வீரர்கள்

மக்கள்தொகையைப் பொறுத்தவரை, இங்கிலாந்தின் பசுமை மீட்பு முதலீடு மிகவும் குறைவு. பிரான்சின் முதலீட்டில் 24 சதவிகிதம், கனடாவின் முதலீட்டில் 21 சதவிகிதம் மற்றும் அமெரிக்காவின் முதலீட்டில் 6 சதவிகிதம் என்ற அளவுக்கு இங்கிலாந்தின் பசுமை மீட்பு முதலீடு உள்ளது.

இந்த அறிக்கையின்படி, இங்கிலாந்தில் பசுமை வளர்ச்சியில் ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் துறையில் 79,000 வேலைகள் ஆபத்தில் உள்ளன. இங்கிலாந்தின் ரசாயனத் துறையில் 63,200, இரும்பு மற்றும் எஃகு ஆகியவற்றில் 26,900 வேலைவாய்ப்புகள் ஆபத்தில் உள்ளன.  

மொத்தத்தில் 260,000 உற்பத்தி வேலைகள் மற்றும் சப்ளை சங்கிலிகளில் 407,000 வேலைவாய்ப்புகளுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று கூறும் அறிக்கை கவலை ஏற்படுத்துகிறது.  

ALSO READ | செக்ஸ் பற்றி நியூசிலாந்து பிரதமர் அளித்த சுவாரஸ்யமான பதில்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News