வட கொரியாவை எச்சரித்த டிரம்ப்: அமெரிக்காவும் தனது அணுசக்தித் திறனைப் பயன்படுத்த தயாராக உள்ளது

Last Updated : Sep 4, 2017, 11:48 AM IST
வட கொரியாவை எச்சரித்த டிரம்ப்: அமெரிக்காவும் தனது அணுசக்தித் திறனைப் பயன்படுத்த தயாராக உள்ளது title=

வட கொரியா அதன் அணுசக்தித் திறனைப் பயன்படுத்தி தொடர்ந்து நட்பு நாடுகளை அச்சுறுத்தும் முயற்சியை மேற்கொண்டால் அமெரிக்காவும் தனது அணுசக்தித் திறனைப் பயன்படுத்த தயாராக உள்ளது என வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது.

சமிபகாலமாக வடகொரியா தொடர்ந்து ஏவுகணையை விண்ணில் ஏவி அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகளை அச்சத்தில் ஆழ்த்திவருகிறது. முன்னதாக அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளை எச்சரிக்கும் வகையில் ஜப்பான் மீது ஏவுகணை செலுத்தி சோதனை செய்து உலக நாடுகளை பயமுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக செப்டம்பர் 3-ம் அன்று இச்செயல்களை குறித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேவுடன் பேசினார். சந்திப்பின் பொது "ஜனாதிபதி டிரம்ப் எங்கள் தாயகத்தை மற்றும் நட்பு நாடுகளை பாதுகாப்பதற்காக ஐக்கிய இராச்சியத்தின் முழுமையான இராஜதந்திர, மரபுவழி மற்றும் அணுசக்தி திறன்களைப் பாதுகாப்பதற்கான உறுதிப்பாடு நிலை நிறுத்தப்படும் என்று கூறியுள்ளார்."

Trending News