பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, இளம் பெண்கள் இருவர் டிரம்பின் வாகனத்தின் மீது மேலாடையை கழற்றி எரிந்த விவகாரம் பெரும் சர்ச்சையினை ஏற்படுதியுள்ளது!
அமெரிக்க அதிபர் டிரம்பின் பல்வேறு கொள்கைகள் உலகம் முழுவதும் எதிர்ப்பு சம்பாதித்து வருகின்றது. வெளிநாட்டு தொழிலாளர்கள், அகதிகளுக்கு கெடுபிடி, மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளிவர்வகளுக்கு கட்டுபாடு, குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் நாட்டிற்குள் வர தடை போன்ற நடவடிக்கைகள் உலக மக்களை வெறுப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்தநிலையில், உலகப்போர் நினைவு தினத்தில் பங்கேற்க பிரான்ஸ் வருகை புரிந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப்-க்கு எதிர்ப்பு தெரிவித்து இளம்பெண் ஒருவர் நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார். பாதுகாப்பு வாகனங்கள் புடை சூழ அவரது வாகனம் பாரிஸ் நகரில் வந்து கொண்டிருந்தபோது திடீரென இளம் பெண் ஒருவர் தனது மேலாடையை கழற்றி வீசியபடி ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினார். அவரை தொடர்ந்து மேலும் ஒரு பெண் அதேபோன்று மேலாடையை கழற்றி எறிந்தவாறு ஓடி வந்தார். ஓடி வந்த பெண்னின் உடலில் Fake Peacemaker என்னும் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது.
Topless protestor breaches security barriers in Paris, runs towards US President Donald Trump's motorcade
Read @ANI story | https://t.co/P8ZwXtz0cs pic.twitter.com/mkRVJjecmC
— ANI Digital (@ani_digital) November 11, 2018
இந்த சம்பவத்தினை அடுத்து பிரான்ஸ் காவல்துறையினர் அந்த இளம்பெணை சுற்றி வளைத்தனர். ஆனால் மற்றொரு இளம் பெண் காவல்துறையிடம் சிக்காமல் தப்பியோடினார். இச்சம்பவத்தினால் சம்பவயிடத்தில் சிறிது நேரம் சச்சரவு ஏற்பட்டது.
முன்னதாக டிரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிஸ் பெண்ணிய இயக்கங்கள் போராட்டங்கள் அறிவித்திருந்தன. அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுப்பட்ட பெண் அந்த அமைப்பை சேர்ந்தவராக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.