உலகில் நேற்று பரபரப்பாக பேசப்பட்ட முக்கிய 10 உலகச் செய்திகள் 22, October 2020

அமெரிக்கா, சீனா, ரஷ்யா, அர்மீனியா என பல்வேறு நாடுகள் தொடர்பான முக்கிய சர்வதேச செய்திகளின் தொகுப்பு...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 22, 2020, 02:45 AM IST
உலகில் நேற்று பரபரப்பாக பேசப்பட்ட முக்கிய 10 உலகச் செய்திகள் 22, October 2020 title=

புதுடெல்லி: அமெரிக்கா, சீனா, ரஷ்யா, அர்மீனியா என பல்வேறு நாடுகள் தொடர்பான முக்கிய சர்வதேச செய்திகளின் தொகுப்பு...

  • அரசாங்க எதிர்ப்பு வெகுஜன போராட்டத்தின் போது தாய் ஜனநாயக சார்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மூன்று விரல்களை மட்டும் பயன்படுத்தி வணக்கம் செலுத்தினார்கள்.
  • சீனாவின் சினோவாக் தடுப்பூசியை பிரேசில் வாங்காது என அந்நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனாரோ உறுதி...
  • ஆஸ்திரேலியா: கோவிட் -19 டெஸ்ட் கிட் தவறுகளுக்குப் பிறகு 200 க்கும் மேற்பட்டோருக்கு எச்.ஐ.வி பரிசோதனை செய்யப்பட உள்ளது. கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தும் முகாமில் வசித்த 200 க்கும் மேற்பட்டோருக்கு எச்.ஐ.வி உள்ளிட்ட ரத்தத்தால் பரவும் நோய்களுக்கும் பரிசோதனை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.  
  • ஆப்பிரிக்க-அமெரிக்க சுகாதாரப் பணியாளர் பிரியோனா டெய்லரை துப்பாக்கியால் சுட்ட  லூயிஸ்வில்லே காவல்துறை அதிகாரி ஜொனாதன் மாட்டிங்லி, "துப்பாக்கிச் சூட்டுக்கும், அவருடைய இனத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று கூறியுள்ளார்.
  • கொரோனா வைரஸ் எப்போதாவது ஒழிக்கப்படும் என்பது சாத்தியமில்லை என்று தலை சிறந்த பிரிட்டிஷ் விஞ்ஞானி ஒருவர் கூறுகிறார்.
  • அலாஸ்கா கடற்கரையில் 12 மாதங்களில் மிகப்பெரிய சுனாமி ஏற்படும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இப்பகுதியில் பனிப்பாறைகள் உருகுவதன் மூலம் ஏற்படும் நிலச்சரிவு காரணமாக அலாஸ்கா விரைவில் ஒரு மெகா சுனாமியால் பாதிக்கப்படக்கூடும் என்று விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர்.
  • காய்ச்சலால் திடீரென ஒன்பது பேர் மரணித்ததால்,தென் கொரியாவில் பீதி நிலவுகிறது. இது தடுப்பூசியில் உள்ள பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
  • கொரோனாவை எதிர்கொள்ள லாஃடவுனை அமல்படுத்த தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா தயாராக உள்ளார்; நிலைமையை கட்டுப்படுத்த முடியாத பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்ப்பாளர்கள் கோரிக்கை.
  • தற்போது பாங்காக்கில் கடுமையான அவசரகால நிலையை நீக்க தயாராகி வருகிறேன், வன்முறை சம்பவங்கள் நிகழவில்லை என்றால் உடனடியாக அவசரகால தடை விதிக்கப்படும் என்று பிரதமர் ஒரு பொது கூட்டத்தில் கூறினார்.
  •  மாஸ்கோவில்  மீண்டும் சண்டை நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகாலை ஆர்மீனியா-அஜர்பைஜான் நடத்துகின்றன."ரஷ்ய தரப்புடன் கலந்தாலோசிப்பதற்காக" அஜர்பைஜான் வெளியுறவு மந்திரி ஜெய்ஹுன் பேராமோவ் மாஸ்கோ வந்தார் என்று  ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.
  • Deepfake கருவி பெண்களின் 100,000 க்கும் மேற்பட்ட போலி நிர்வாண படங்களை உருவாக்க உதவியது: அறிக்கை. 100,000 க்கும் மேற்பட்ட பெண்களின் போலி உருவங்களை உருவாக்கிய அடையாளம் தெரியாத bot-ஐ  நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது, அந்த படங்கள் பொது தளங்களில் பகிரப்பட்டுள்ளன 

 Also Read | TEக்கு ஏன் தடை விதிக்கப்பட்டது?  இங்கிலாந்து நீதிமன்றம் அதிரடி கேள்வி! தடை நீங்க வாய்ப்பு!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News