இறந்த குழந்தை உடலை 5 ஆண்டுகளாக பதப்படுத்தி வரும் தாய்!

ஜப்பான் நாட்டின் டோக்கியோவில், இறந்த குழந்தையினை லாக்கரில் வைத்து பதப்படுத்திவந்த 45-வயது பெண்மனியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 25, 2018, 03:21 PM IST
இறந்த குழந்தை உடலை 5 ஆண்டுகளாக பதப்படுத்தி வரும் தாய்! title=

டோக்கியா: ஜப்பான் நாட்டின் டோக்கியோவில், இறந்த குழந்தையினை லாக்கரில் வைத்து பதப்படுத்திவந்த 45-வயது பெண்மனியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்!

டோக்கியோ அருகே உள்ள யோட்சியா என்ற பகுதியில் வசித்துவரும் இப்பெண்மனி கருவுற்று இருந்தபோது அவரது கணவர் இறந்த நிலையில், இவருக்கு பிறந்த பெண் குழந்தையும் பிறந்த இரண்டு மணி நேரத்தில் உயிர் பிரிந்துள்ளது.

கணவரை இழந்து தனிமையில் வாழவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட இவர் தனது இறந்த குழந்தையினை தன்னுடன் வைத்துக்கொள்ள முயன்றுள்ளார். இதற்கிடையில் தான் தங்கியிருந்த வீட்டில் இருந்து ஒருமுறை இடம்பெயர்கையில்... தனது இறந்த குழந்தையின் உடலை லாக்கரில் வைத்து இடம் மாற்றியுள்ளார்.

இவ்வாறு கடந்த 5 ஆண்டுகளாக தனது இறந்த குழந்தையின் உடலை இவர் தன்னுடன் வைத்து வாழ்ந்து வந்துள்ளார்,. மேலும் இந்த இறந்த குழந்தை இவருக்கு அதிர்ஷ்டம் வழங்கி வருவதாக என்னிய இவர் குழந்தையின் உடலை தன்னுடனே வைத்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 13-ஆம் நாள் இப்பெண்மனி மீண்டும் வீட்டை மாற்றுகையில் குழந்தையின் இறந்த உடல் குறித்த விவரம் வெளிவந்துள்ளது. இதனையடுத்து குற்றம்சாட்டப்பட்ட பெண்மணியினை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

Trending News