NATO+ நாடுகளில் இணைகிறதா இந்தியா... அமெரிக்காவின் பரிந்துரையால் கலக்கத்தில் சீனா!

நேட்டோ பிளஸ் நாடுகள்: இப்போது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் மேலாதிக்கம் முடிவுக்கு வர உள்ளது, ஏனெனில் இந்தியா நேட்டோ பிளஸில் சேரலாம். அமெரிக்க தேர்வுக் குழு இதனை பரிந்துரை செய்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 28, 2023, 10:52 AM IST
  • நேட்டோ பிளஸ் அமைப்பில் இந்தியா இணைந்தால், இந்த நாடுகளுக்கு இடையேயான உளவுத் தகவல்கள் எந்தத் தடையும் இல்லாமல் பகிரப்படும்.
  • அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான நெருக்கமான கூட்டாண்மையை அதிகரிக்கும்.
NATO+ நாடுகளில் இணைகிறதா இந்தியா... அமெரிக்காவின் பரிந்துரையால் கலக்கத்தில் சீனா! title=

நேட்டோ பிளஸ் நாடுகளில் இந்தியா: சீனாவின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்திற்கு முன்னதாக, இந்தியாவை நேட்டோ பிளஸில் சேர்க்க சக்திவாய்ந்த அமெரிக்கக் குழு பரிந்துரைத்துள்ளது. நேட்டோ பிளஸ் என்பது உலகளாவிய பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க நேட்டோ மற்றும் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இஸ்ரேல், ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய 5 கூட்டணி நாடுகளை ஒன்றிணைக்கும் ஒரு பாதுகாப்பு ஏற்பாடாகும். நேட்டோ பிளஸ் அமைப்பில் இந்தியா இணைந்தால், இந்த நாடுகளுக்கு இடையேயான உளவுத் தகவல்கள் எந்தத் தடையும் இல்லாமல் பகிரப்படும். இது தவிர, எந்த நேர இடைவெளியும் இல்லாமல் நவீன ராணுவ தொழில்நுட்பத்தை இந்தியா அணுக முடியும்.

நேட்டோ பிளஸ் மிகவும் சக்திவாய்ந்ததாக மாறும்!

அமெரிக்காவிற்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் (CCP) இடையேயான மூலோபாய போட்டிக்கான ஹவுஸ் செலக்ட் கமிட்டி, தைவானின் எதிர்ப்புத் திறனை அதிகரிப்பதற்கான கொள்கை முன்மொழிவை நிறைவேற்றியது, இதில் இந்தியாவையும் சேர்த்து நேட்டோ பிளஸ் வலுப்படுத்துவது உட்பட.

சீனாவின் ஆதிக்கத்திற்கு முடிவு

இந்தக் குழுவுக்கு தலைமை மைக் கல்லகர் மற்றும் தரவரிசை உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் மூலோபாயப் போட்டியில் வெற்றி பெறவும், தைவானின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், இந்தியா உள்ளிட்ட நமது நட்பு நாடுகளுடனும் பாதுகாப்புப் பங்காளிகளுடனும் அமெரிக்கா தொடர்புகளை வலுப்படுத்த வேண்டும் என்று தேர்வுக் குழு கூறியுள்ளது.

சீனாவின் அட்டூழியம் நிறுத்தப்படும்!

குறிப்பிடத்தக்க வகையில், நேட்டோ பிளஸில் (NATO PLUS COUNTRIES) இந்தியாவைச் சேர்ப்பது, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் CCP இன் ஆக்கிரமிப்பைக் கட்டுப்படுத்துவதிலும், உலகப் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான நெருக்கமான கூட்டாண்மையை அதிகரிக்கும். கடந்த 6 ஆண்டுகளாக இந்த திட்டத்தில் பணியாற்றி வரும் இந்திய-அமெரிக்கரான ரமேஷ் கபூர், இது ஒரு முக்கியமான முன்னேற்றம் என்று கூறினார். இந்த பரிந்துரை தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டம் 2024 இல் இடம் பெறும் என்றும் இறுதியில் அது சட்டமாக மாறும் என்றும் ரமேஷ் கபூர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி அடுத்த மாதம் அரசுமுறை பயணமாக அமெரிக்கா செல்கிறார் என்பது தெரியும்.

பிரதமர் மோடி (PM Narendra Modi) அடுத்த மாதம் 22 ந்தேதி அமெரிக்கா செல்ல உள்ளார் என்பது குரிப்பிடத்தக்கது. இதையொட்டி வாஷிங்டன்னில் முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை அதிகாரி கரின் ஜீன், பிரதமர் மோடியின் வருகை இந்திய -அமெரிக்க நாடுகளிடையே நட்புணர்வை மேலும் அதிகரிக்கும் என்று கூறினார். இரு நாடுகளின் ஆழமான பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிக்கும் வாய்ப்பாக பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் அமையும் என்றும் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

மேலும் படிக்க | ₹75 நினைவு நாணயம் வெளியீடு! நாடாளுமன்றத்தின் புதிய கட்டட திறப்புவிழா

நேட்டோ பிளஸ் 5 என்பது நேட்டோ அமைப்பு மற்றும் அமெரிக்காவின் 5 நட்பு நாடுகளான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், இஸ்ரேல் மற்றும் தென் கொரியா சேர்ந்த அமைப்பாகும்.  உலகளாவிய பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க அமெரிக்க மற்றும் நேட்டோ நாடுகளின் ஐந்து நட்பு நாடுகளை ஒன்றிணைக்கும் ஏற்பாடாகும்.

மேலும் படிக்க | 2000 Rupee Note: வங்கியை தவிர வேறு எங்கெல்லாம் 2000 ரூபாய் நோட்டை மாற்றலாம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News