ஆப்கானில் தலிபான்கள் தாக்குதல்: 15 பேர் பலி!

ஆப்கானிஸ்தானின் குண்டுஸ் மாகாணத்தில் தாலிபன்கள் வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் தாக்குதல் நடத்தி உள்ளனர்!

Last Updated : Jun 11, 2018, 12:16 PM IST
ஆப்கானில் தலிபான்கள் தாக்குதல்: 15 பேர் பலி! title=

ஆப்கானிஸ்தானின் குண்டுஸ் மாகாணத்தில் தாலிபன்கள் வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் தாக்குதல் நடத்தி உள்ளனர்!

சிரியாவை போன்றே ஆப்கானிஸ்தான் போரால் சீரழிந்த நாடுகளில் ஒன்றாக உள்ளது. கடந்த 16 வருடங்களாக தலீபான் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் அப்பாவி பொது மக்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.

அந்நாட்டு அரசு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தலீபான் அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என முன்வந்தது. எனினும், தொடர்ந்து அந்த பகுதிகளில் தாக்குதல் நடந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது, ஆப்கானிஸ்தானின் குண்டுஸ் மாகாணத்தில் உள்ள ஆக் திப்பா மாவட்டத்தில் சோதனை சாவடிகள் மீது தலிபான்கள் ஒருங்கிணைந்து இன்று அதிகாலை தாக்குதல்களை நடத்தினர். தாலிபன்கள் வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

இதற்கு ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்கள் பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில் 15 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து பாதுகாப்பு படையினருக்கும், தலிபான்களுக்கும் இடையே தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதனை நங்கர்ஹர் கல்வித்துறை தலைவர் ஆசிப் ஷின்வாரி உறுதி செய்துள்ளார்.

Trending News