அமேரிக்கா: பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பது பொதுவான பழமொழி. பாம்பு வீட்டிற்குள் நுழைந்தாலோ, அல்லது அதனை நாம் நேரே எதிர்கொண்டாலோ அந்த ஒரு நொடி என்ன செய்வதென்று தெரியாமல் பலரும் அதிர்ச்சியில் உறைந்துவிடுவோம். பாம்பை கண்டால் நடுங்குவதற்கு காரணம் அவை விஷ பூச்சி, அவை தீண்டினால் நமக்கு மரணம் தான், அதனாலேயே இதனை கண்டால் பலருக்கும் பயம்.
ALSO READ டயர் பஞ்சராகி நின்ற விமானம்: கைகளால் தள்ளும் பயணிகள்: வைரலாகும் Video
மேரிலாந்தின் பூல்ஸ்வில்லே என்கிற பகுதியில் ஒருவர் வசித்து வருகிறார். இவர் வசிக்கும் பகுதியில் அதிக விஷம் கொண்ட பாம்புகள் நிறைந்துள்ளன. எதிர்பாராதவிதமாக ஒரு நாள் பாம்பு ஒன்று அவரது வீட்டிற்குள் நுழைந்துவிட்டது. உடனே அதை விரட்ட எண்ணிய அவர் புகையை பயன்படுத்தி பாம்பை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டார்.
அந்த பகுதியில் எளிதில் பற்றிக்கொள்ள கூடிய வகையிலான பொருட்கள் இருந்ததை மறந்து, இவர் நெருப்பு புகையை பயன்படுத்தி பாம்பை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். இன்னாஇலையில் சற்றும் எதிர்பார்க்காதவாறு அந்த பொருட்கள் மீது தீப்பற்றி, வீட்டின் கீழ்தளம் தொடங்கி சுவர்கள் என அனைத்திலும் தீப்பற்றி வீடு முழுவதும் எரிய தொடங்கியது.
இதனையடுத்து வீடு கொழுந்துவிட்டு எரிவதை கண்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு ஒருவழியாக தீயை அணைத்தனர். இதில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை, வீட்டிற்குள் நுழைந்த அந்த பாம்பும் உயிருடன் இருந்துள்ளது. அதனை மீட்ட தீயணைப்பு துறையினர் வனப்பகுதியில் விட்டுவிட்டனர். ஆனால் பாம்பை விரட்ட முயன்றவரின் சுமார் 1 மில்லியன் மதிக்கத்தக்க வீடு எரிந்து நாசமாகி விட்டது குறிப்பிடத்தக்கது.
ALSO READ Historical starting point: சீனா மற்றும் லாவோஸை இணைக்கும் ரயில் பாதை திறக்கப்பட்டது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR