“தி மவுண்டைன்” நடிகர் உலகின் வலிமையான மனிதராக தேர்வு!

உலகின் வலிமையான மனிதராக “கேம் ஆஃப் த்ரோன்ஸ்” நடிகர் நடிகரான ஹஃப்வோர் ஜுலஸ் பிஜோர்ன்சன் தேர்வு! 

Last Updated : May 8, 2018, 03:23 PM IST
“தி மவுண்டைன்” நடிகர் உலகின் வலிமையான மனிதராக தேர்வு!  title=

கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ள ஹஃப்வோர் ஜுலஸ் பிஜோர்ன்சன் உலகிலேயே வலிமையான மனிதராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிலிபைன்ஸ்: சமீபத்தில் பிலிபைன்ஸ் நாட்டில் உலகின் வலிமையான மனிதர்களுக்கான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வலிமையான மனிதர்கள் பலர் பங்கேற்றனர். இதில் கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொலைக்காட்சி தொடரில் “தி மவுண்டையின்” கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் ஹஃப்வோர் ஜுலஸ் பிஜோர்ன்சன்னும் பங்கேற்றுள்ளார்.

 

Don’t ever let someone tell you that you can’t do something. You got a dream, you gotta protect it. When people can’t do something themselves, they are going to tell you that you can’t do it. You want something, go get it. Period. • -Will Smith • #numberone •  @andrimarinn

A post shared by Hafþór Júlíus Björnsson (@thorbjornsson) on

இவர் சுமார் 6 அடி, 180 கிலோ எடை கொண்டவர். இவர் இந்த போட்டியில் தனது விடாமுயற்சியால் தொடர்ந்து ஏழு முறை கலந்துகொண்டுள்ளார். இவரின் இந்த விடாமுயற்சி காரணமாக இந்த வருட போட்டியில் வெற்றியடைந்துள்ளார். 

 இது குறித்து அவர் தனது இன்ஸ்டகிராமில் தனது நண்பர்கள், பெற்றோர், ரசிகர்கள் ஆகியோருக்கு தனது நன்றிகளை தெரிவித்து ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.உலகிலேயே வலிமையான மனிதன் பட்டம் உட்பட ஐரோப்பாவின் வலிமையான மனிதர், அர்னால்ட் ஸ்டார்ங்மேன் ஆகிய இரண்டு பட்டங்களையும் இந்த வருடம் இவர் வென்றுள்ளார். இந்த மூன்று பட்டங்களையும் ஒரே வருடத்தில் வெல்லும் முதல் மனிதர் இவர் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending News