தப்பியோடிய மெகுல் சோக்ஸியை இந்தியா கொண்டு வரும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக தகவல்

 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 18, 2021, 07:24 AM IST
  • மெகுல் சோக்ஸியின் போலீஸ் காவல் சிறைக் காவலாக மாற்றப்பட்டுள்ளது.
  • ஆனால் அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளதால் அவர் மருத்துவமனையில் இருக்கிறார்.
  • சோக்ஸிக்கு எதிரான வழக்கை டொமினிகாவில் உள்ள ஒரு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஜூன் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது
தப்பியோடிய மெகுல் சோக்ஸியை இந்தியா கொண்டு வரும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக தகவல் title=

 

புதுடெல்லி: நாட்டை உலுக்கிய பஞ்சாப் நேஷனல் வங்கி ₹13,5000 கோடி ஊழல் (PNB Scam) வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தப்பியோடிய வைர வர்த்தகர் மெகுல் சோக்ஸி (Mehul Choksi)  இந்தியாவிலிருந்து தப்பியோடி, ஆன்டிகுவா தீவில் வாழ்ந்து வருகிறார். மெஹுல் சோக்ஸியை சிறைக்கு அனுப்ப டொமினிகா நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. அவர் இதுவரை போலீஸ் காவல் இருந்தார். ஆனால் அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதால் அவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார் என கூறப்படுகிறது. 

வழக்கறிஞர் விஜய் அகர்வால், "போலீஸ் காவல் சிறைக் காவலாக மாற்றப்பட்டுள்ளது, ஆனால் அவரது மருத்துவ நிலை மோசமடைந்துள்ளதால் அவர் மருத்துவமனையில் இருப்பார்" என்று கூறினார்.  இதனால், அவர் விரைவில் இந்தியாவிற்கு திருப்பி  அனுப்பப்படலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.  

இந்தியாவில் சட்ட நடவடிக்கையை தவிர்க்க தப்பி ஓடிய வைர வியாபாரி மெஹுல் சோக்ஸியை (Mehul Choksi) விசாரணைக்காக இந்தியாவிடம் ஒப்படைப்பது தொடர்பாக டொமினிகா அரசாங்கத்துடன் அரசாங்கம் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

"மெஹுல் சோக்ஸி தற்போது டொமினிகாவில் காவலில் வைக்கப்பட்டுள்ளார், அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கை  தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாகி வாராந்திர செய்தியாளர் கூட்டத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மெகுல் சோக்ஸியை விசாரணைக்காக இந்தியாவிடம் ஒப்படைப்பது தொடர்பாக டொமினிகா அரசாங்கத்துடன், இந்திய அரசு தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இதனால் இது விரைவில் சாத்தியமாகும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

ALSO READ | மெகுல் சோக்ஸி சிறையில் இருக்கும் படங்கள் வெளியானது; அவரது ‘காயங்கள்’ கூறுவது என்ன

இந்தியாவில் மெஹுல் சோக்ஸியின் மீதான குற்றவியல் வழக்குகள் மற்றும் இந்திய குடியுரிமை தொடர்பான விஷயங்கள் குறித்து டொமினிகா அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று பாகி கூறினார். கரீபியன் தீவு தேசத்திற்குள் சோக்ஸி சட்டவிரோதமாக நுழைந்ததாகக் கூறப்படும் வழக்கு மீதான விசாரணையை டொமினிகாவில் உள்ள ஒரு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஜூன் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

தப்பியோடிய வைர வியாபாரி சோக்சிக்கு எதிராக டொமினிகா நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்து வருகின்றன. ஆன்டிகுவா மற்றும் பார்புடாவிலிருந்து மர்மமான முறையில் காணாமல் போன பின்னர் டொமினிகாவில் கண்டுபிடிக்கப்பட்டு, அங்கு சட்டவிரோதமாக நுழைந்ததற்காக சோக்ஸி மே 24 அன்று கைது செய்யப்பட்டார்.

ALSO READ | PNB வங்கி மோசடி: ஆன்டிகுவாவில் இருந்த மெகுல் சோக்ஸியை காணவில்லை

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News