பீஜிங்: ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் சீனா ஆக்கபூர்வமான பங்கை வகித்துள்ளது என்றும் நாட்டின் புனரமைப்பிற்கு சீனா செய்ய நினைக்கும் உதவிகள் வரவேற்கத்தக்கது என்றும் தாலிபானின் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் சீன அரசு ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
கடந்த சில நாட்களில் ஆப்கானிஸ்தானில் (Afghanistan) பரபரப்பான பல சம்பவங்கள் நடந்து விட்டன. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் உட்பட ஆப்கானின் கிட்டத்தட்ட அனைத்து நகரங்களையும் தாலிபான் தன்வயப் படுத்தியது. ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானி நாட்டை விட்டு தப்பித்து ஓடினார். ஆப்கான் மக்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான ஆப்கான் குடிமக்கள் பாதுகாப்புக்காக பிற நாடுகளுக்கு செல்ல முயன்று வருகின்றனர்.
20 ஆண்டுகளுக்கு முன்னர் முடிவடைந்த முந்தைய தாலிபான் ஆட்சியின் போது விதிக்கப்பட்ட இஸ்லாமிய சட்டத்தின் கடுமையான நிபந்தனைகளை தாலிபான் மீண்டும் கொண்டு வருமோ என்ற அச்சம் வெகுவாக உள்ளது.
இந்த நிலையில், சக்திவாய்ந்த நாடாக இருக்கும் சீனா ரஷ்யா மற்றும் அமெரிக்காவைப் போலல்லாமல், ஆப்கானிஸ்தானில் எந்த வித சண்டைகளிலும் ஈடுபடவில்லை என்பதால், தலிபான்களைக் கையாள்வது, அந்த நாட்டுக்கு மிக எளிதாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.
ALSO READ: விமானத்தில் இருந்து விழந்தது கால்பந்து வீரர் - அதிர்ச்சி தகவல்!
"சீனா (China) ஒரு பெரிய பொருளாதாரம் மற்றும் திறன் கொண்ட ஒரு பெரிய நாடு. ஆப்கானிஸ்தானின் புனரமைப்பு, மறுவாழ்வு, வளர்ச்சி ஆகியவற்றில் சீனாவால் மிகப் பெரிய பங்கு வகிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன்," என்று ஷகீன் வியாழக்கிழமை பிற்பகுதியில் ஒரு நேர்காணலில் சிஜிடிஎன் தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்.
கடந்த மாதம் வடக்கு சீன துறைமுக நகரமான தியான்ஜினில் தாலிபான் குழுவுடன் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி சந்திப்பு நடத்தினார். அப்போது, ஆப்கானிஸ்தான் ஒரு மிதமான இஸ்லாமிய கொள்கையை ஏற்றுக்கொள்வ்தை சீனா விரும்பும் என்று அவர் கூறினார்.
சீனா தனது மேற்கு சின்ஜியாங் பிராந்தியத்தில் மத தீவிரவாதத்தை ஒரு சீர்குலைக்கும் சக்தியாக மேற்கோள் காட்டியுள்ளது. பிரிவினைவாத சக்திகளுக்கு தாலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசம் பயன்படும் என்று நீண்டகாலமாக தன் கவலைகளையும் வெளிப்படுத்தி வந்துள்ளது.
தற்போது ஆப்கானிஸ்தானில் தாலிபான் (Taliban) கை ஓங்கியுள்ள நிலையில், சீனா தன் சாய்வை ஆப்கான் பக்கம் திருப்பிக்கொண்டுள்ளது. இது சீனாவின் குள்ளநரித்தனத்துக்கு மற்றொரு எடுத்துக்காட்டாகும்.
ALSO READ: தொடங்கியது தாலிபான் கொடூரம்: அச்சத்தின் உச்சியில் ஆப்கான் மக்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR