Afghanistan: ஹக்கானி நெட்வொர்க் வசம் சென்றது பாதுகாப்பு பொறுப்பு; அச்சத்தின் உலகம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் பாதுகாப்புப் பொறுப்பை ஹக்கானி நெட்வொர்க்கிடம் ஒப்ப்டைத்துள்ளது தாலிபான் 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 21, 2021, 09:53 AM IST
  • ஹக்கானி நெட்வொர்க் ஐஎஸ்ஐ கட்டுப்பாட்டில் உள்ளது
  • அல்கொய்தாவுடனும் ஹக்கானி நெட்வொர்க் தொடர்பில் உள்ளது
  • ஹக்கானி நெட்வொர்க் மீது பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தியதாக குற்றசாட்டு.
Afghanistan: ஹக்கானி நெட்வொர்க் வசம் சென்றது பாதுகாப்பு பொறுப்பு; அச்சத்தின் உலகம் title=

Haqqani Network In Kabul:  ஆப்கானிஸ்தானில் இருந்து உலகை அச்சுறுத்தும் வகையிலான  செய்தி வந்துள்ளது. பயங்கரவாத அமைப்பான தாலிபான் (Taliban) பாதுகாப்புப் பொறுப்பை ஹக்கானி நெட்வொர்க்கிடம் (Haqqani Network) ஒப்படைத்துள்ளது. ஹக்கானி நெட்வொர்க்கிற்கு அல்-காய்தாவுடன் (Al-Qaeda) தொடர்புகள் உள்ளது என்பதும், பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ நேரடியாக ஹக்கானி நெட்வொர்க்கைக் கட்டுப்படுத்துகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹக்கானி நெட்வொர்க் தலைவர் நடத்திய கூட்டம் 

இந்த வாரம் வியாழக்கிழமை, ஆப்கானிஸ்தானின் தேசிய நல்லிணக்க கவுன்சிலின் தலைவர் அப்துல்லா அப்துல்லா, கலீல் அல் ரஹ்மான் ஹக்கானியை (Khalil al Rahman Haqqani) சந்தித்து காபூலின் பாதுகாப்புப் பொறுப்பை ஹக்கானி நெட்வொர்க்கிடம் ஒப்படைத்தார்.

உலகிற்கு பெரும் அச்சுறுத்தல்

ஹக்கானி நெட்வொர்க் இந்தியா உட்பட  உலகம் முழுவதற்கு ஒரு பெரிய அச்சுறுத்தல் ஆகும். ஹக்கானி நெட்வொர்க் கடந்த காலங்களில் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தளங்கள் மீது பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டது. பயங்கரவாதிகள் பிடியில் ஆப்கானிஸ்தான் சிக்கியுள்ளது, உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

ALSO READ | விமானத்தில் இருந்து விழந்தது கால்பந்து வீரர் - அதிர்ச்சி தகவல்!

இதற்கிடையே, ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர் அஷ்ரப் கானியின் சகோதரர் தலிபான்களுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார்.

220 இந்தியர்கள் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே சிக்கியுள்ளனர்

காபூல் சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே சுமார் 220 இந்தியர்கள் சிக்கியுள்ளனர் என கூறப்படுகிறது. அவர்கள் கடந்த 6 மணி நேரமாக விமான நிலையத்தில் நுழைவுக்காக காத்திருந்தனர். காபூலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இந்திய விமானப்படை விமானம் சி 17 விமான நிலையத்தில் உள்ளது. காபூலில் சிக்கியுள்ள இந்தியர்கள் மிகவும் பீதியில் உள்ளனர். அவர்கள் உடனடியாக உதவி புரியுமாறு கோருகின்றனர்.

முன்னதாக, ஆப்கானிஸ்தானை தாலிபான் கைப்பற்றியதிலிருந்தே, அவர்கள் கொடுங்கோல் ஆட்சிக்கு அஞ்சு அங்குள்ள மக்கள் அங்குள்ள விமான நிலையங்களில் அலை மோதும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகின.

ALSO READ | ஆப்கானிஸ்தானில் ஜனநாயகத்திற்கு இடமில்லை; ஷரியத் சட்டம் தான்: தாலிபான்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News