தொடங்கியது தாலிபான் கொடூரம்: அச்சத்தின் உச்சியில் ஆப்கான் மக்கள்

காந்தஹாரில் பணிபுரியும் 21 வயது பெண் ஆசிரியர் ஒருவர் தான் காபூலுக்கு தப்பி வந்ததாகக் கூறினார். காந்தஹாரில் அவர் எப்போதும் வீட்டிலேயே இருந்ததாகவும், வெளியே செல்ல முடியாத சூழல் இருந்ததாகவும் அவர் கூறினார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 20, 2021, 02:23 PM IST
தொடங்கியது தாலிபான் கொடூரம்: அச்சத்தின் உச்சியில் ஆப்கான் மக்கள் title=

காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து மக்கள் மனங்களில் அச்சம் குடிகொண்டுள்ளது. மக்கள் அஞ்சி நடுங்கிய விஷயங்கள் உண்மையாகத் தொடங்கிவிட்டன. சட்டம் ஒழுங்கு ஆகியவை இங்கு காணாமல் போய் விட்டன.

தாலிபான் (Taliban) போராளிகள் யாரை வேண்டுமானாலும் வீட்டிலிருந்து வெளியே இழுத்து அடித்து துன்புறுத்துகிறார்கள், தங்கள் இலக்காக்குகிறார்கள். இங்கு சட்டம் என்று எதுவும் இல்லை. பயங்கரவாதிகள் யாரையும் வீட்டை விட்டு வெளியே அழைத்துச் சென்று அடிக்கிறார்கள், தங்கள் இலக்காக்குகிறார்கள். ஆப்கான் தலைநகர் காபூலிலும் ஒருவர் இது போன்ற நிலைமையை எதிர்கொள்ள வேண்டி இருந்தது.

வீடு புகுந்து துன்புறுத்தும் தாலிபான்கள்

தி சன் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, காபூலில் (Kabul) தாலிபான் தீவிரவாதிகள் ஒருவரைப் பிடித்து கடுமையாகத் தாக்கினர். பின்னர் அவரது முகத்தில் நிலக்கரி தாரை பூசினர். இதற்குப் பிறகு பாதிக்கப்பட்டவரை வீதியில் உலாவாக அழைத்து சென்றனர்.

அந்த நபர் மீது திருட்டுப் பழி போடப்பட்டது. தாலிபான்கள் அந்த நபரை சாலை ஓரத்தில் கைகளை உயர்த்தியபடி அமர வைத்தனர். பின்னர் ஒரு தாலிபான் போராளி, அந்த நபர் மீது ஒரு ராக்கெட் லாஞ்சரை ஏவினான்.

ALSO READ: பல வித இன்னல்களை சந்திக்கும் தாலிபான்: இந்தியாவுடனான உறவு எப்படி இருக்கும்?

தாலிபான் பயங்கரவாதிகள் இந்த வாதத்தை முன்வைத்தனர்

மனதை பதபதைக்க வைக்கும் இப்படிப்பட்ட செயலை செய்த தாலிபான் போராளிகள் அந்த மனிதன் தனது பாவங்களிலிருந்து விடுபடுவதற்காக இப்படிச் செய்ததாகக் கூறினார்கள். குறிப்பிடத்தக்க வகையில், தாலிபான் பயங்கரவாதிகளின் இந்த அணுகுமுறை காரணமாக, ஆப்கானிஸ்தானில் மிக அதிக அச்சத்தின் சூழல் உள்ளது. ஆப்கானிஸ்தானில் (Afghanistan) இஸ்லாமிய ஷரியா சட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதாக தாலிபான் உறுதியளித்துள்ளது.

புர்கா அணியாததால் கொடூரமான தண்டனை வழங்கப்பட்டது

முன்னதாக, ஒரு பெண் புர்கா அணியாமல் வீட்டை விட்டு வெளியே வந்ததற்காக தாலிபான் தீவிரவாதிகள் அந்த பெண்ணை சுட்டுக் கொன்றனர். ஆப்கானிஸ்தானின் தகர் மாகாணத்தின் தாலோகான் நகரில் இந்த சம்பவம் நடந்தது.

அதேபோல், காந்தஹாரில் பணிபுரியும் 21 வயது பெண் ஆசிரியர் ஒருவர் தான் காபூலுக்கு தப்பி வந்ததாகக் கூறினார். காந்தஹாரில் அவர் எப்போதும் வீட்டிலேயே இருந்ததாகவும், வெளியே செல்ல முடியாத சூழல் இருந்ததாகவும் அவர் கூறினார். எப்போது வேண்டுமானாலும், ஏதாவது ஒரு தீவிரவாதி வந்து தங்கள் வீட்டுக் கதவை தட்டக்கூடும் என்ற அச்சம் அவருக்கு தொடர்ந்து இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ALSO READ:இந்தியா தாலிபான்களுடன் பேச்சு நடத்தியதா; வெளியுறவு அமைச்சர் கூறியது என்ன..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News