ஆப்கானில் ரமலானை முன்னிட்டு 3 நாள் போர் நிறுத்தம்!

ஆப்கானிஸ்தானில் ரமலான் பண்டிகையினை முன்னிட்டு மூன்று நாட்கள் போர் நிறுத்தத்தை தலிபான்கள் அறிவித்துள்ளனர்!

Last Updated : Jun 9, 2018, 06:44 PM IST
ஆப்கானில் ரமலானை முன்னிட்டு 3 நாள் போர் நிறுத்தம்! title=

ஆப்கானிஸ்தானில் ரமலான் பண்டிகையினை முன்னிட்டு மூன்று நாட்கள் போர் நிறுத்தத்தை தலிபான்கள் அறிவித்துள்ளனர்!

இதுகுறித்து தலிபான்கள் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது... "ரமலான் பண்டிகையினை முன்னிட்டு மூன்று நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவிக்கின்றோம். ஆனால் இதில் வெளி நாட்டுப்படைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது, எனவே எங்களை காத்துக் கொள்ளும் விதமாக அவர்களுக்கு எதிரான எங்கள் தாக்குதல் தொடரும்" என தெரிவித்துள்ளனர்.

கடந்த 2001-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில், அமெரிக்கப் படையெடுப்புக்குப் பின்னர் தலிபான்கள் போர் நிறுத்த ஒப்பத்தத்திற்கு முதல்முறையாக சம்மதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப் படையும் அங்கு முகாம் இட்டுள்ளது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தலிபான் அமைப்பைப் சேர்ந்த தற்கொலைப் படைத் தீவிரவாதி தலைநகர் காபூலில் வெடிகுண்டுகள் நிரப்பிய ஆம்புலன்ஸை வெடிக்கச் செய்ததில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருபுறம் போர் நிறுத்தத்தினை தலிபான்கள் அறிவித்திருக்கும் போதிலும், மறுபுறம் தலிபான்களின் தாக்குதல் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Trending News