பகீர் சம்பவம்! ஒரே நாளில் 10 டோஸ் கொரோனா தடுப்பூசி!

ஒரே நாளில் அதிக அளவு தடுப்பூசிகளை எடுத்துக்கொண்ட விசித்திரமான சம்பவம் மருத்துவர்களுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Written by - S.Karthikeyan | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 2, 2023, 11:13 AM IST
  • கொரோனா தடுப்பூசி தொடர்பான விசித்திரமான வழக்கு
  • ஒரே நாளில் 10 டோஸ் கொரோனா தடுப்பூசி
  • நியூசிலாந்தின் சுகாதார அமைச்சகத்தில் பரபரப்பு
பகீர் சம்பவம்! ஒரே நாளில் 10  டோஸ் கொரோனா தடுப்பூசி! title=

நியூசிலாந்து: கொரோனாவை வீழ்த்த தடுப்பூசி ஒன்றே ஆயுதமாக உள்ள நிலையில், உலக நாடுகள் அனைத்தும் தங்கள் குடிமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட தீவிரமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதே நேரத்தில், புதிய மாறுபாட்டான ஓமிக்ரானுக்கு எதிராக பாதுகாக்கும் நோக்கில், சில நாடுகள் பூஸ்டர் டோஸ்கள் செலுத்தும் பணியையும் தொடங்கியுள்ளன.  ஓமிக்ரான் (Omicron) பீதிக்கு மத்தியில் தடுப்பூசிகள் மற்றும் பூஸ்டர் டோஸ்களைப் போட மக்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், ஒருவர் 24 மணி நேரத்தில் 10 டோஸ் கரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸை ஒருவர் இவ்வளவு டோஸ் எடுத்துக்கொண்ட முதல் நபர் இவராக இருக்கலாம். அதில், அந்த நபர் 10 டோஸ் தடுப்பூசியை வெறும் 24 மணி நேரத்திற்குள்போட்டுக் கொண்டுள்ளார். இந்த தகவல் வெளியாகியதை அடுத்து, நியூசிலாந்து சுகாதார அமைச்சகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

DW.com தளத்தில் வெளியான அறிக்கையில், கோவிட் -19 தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்பு திட்டத்தின் குழு மேலாளர் ஆஸ்ட்ரிட் கோர்னிஃப், 'இது குறித்து அமைச்சகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது, நாங்கள் இந்த விஷயத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். ஏனென்றால் பல தடுப்பூசிகளை எடுத்துக்கொள்வதால் அவருக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே அவரைப் பற்றி உங்களுக்குத் தெரிந்தால், உடனே தெரிவிக்கவும். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தவும் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ALSO READ | Breaking: ஆந்திரா, சண்டிகரில் நுழைந்தது ஓமிக்ரான் தொற்று, அதிகரிக்கும் எண்ணிக்கை

குறிப்பிட்ட இந்த நபர் ஒரு நாளில் பல தடுப்பூசி மையங்களுக்குச் சென்று நிறைய தடுப்பூசிகளை போட்டுக் கொண்டுள்ளார். இதற்கு அவர் வெவ்வேறு நபர்களின் அடையாள அட்டைகளை பயன்படுத்தினார். ஆஸ்ட்ரிட் கோர்னிஃப் மேலும் கூறுகையில், தடுப்பூசி போட  யாருடைய பேர் பதிவு செய்யப்பட்டுள்ளதோ, உண்மையில் அவர்களுக்கு தடுப்பூசி போடப்படவில்லை. அவர்களது பெயரில், ஒரு குறிப்பிட்ட நபர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார் என்றார்.

ஆக்லாந்து பல்கலைக்கழக தடுப்பூசி நிபுணர் ஹெலன் பெடோயிஸ்-ஹாரிஸ் இது குறித்து கூறுகையில், இதுபோன்ற ஏராளமான தடுப்பூசிகளை எடுத்துக்கொள்வதால் ஏற்படும் விளைவு குறித்த தரவுகள்எதுவும் தற்போது இல்லை. அதனால், ஒரு நாளைக்கு 10 டோஸ்களை எடுத்துக் கொள்ளும் ஒருவருக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என சொல்வது மிகவும் கடினம். ஆனால் அவ்வாறு எடுத்துக் கொள்வது நிச்சயம் பாதுகாப்பானது அல்ல என்றார்.

ALSO READ | ஒமிக்ரான் பீதி; மும்பையில் இன்றும், நாளையும் 144 தடை அமல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

Trending News