ஈராக்: மதகுரு மொக்தாதா சதரின் ஆதரவாளர்கள் அதிஉயர் பாதுகாப்பு வளையத்திற்குள் நுழைந்து இராக் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர். ஈராக் ஷியா மதகுரு மொக்தாதா அல்-சதர் ஆதரவாளர்கள் ஊழலுக்கு எதிராக, ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்திற்குள் போராட்டம் நடத்தும்போது அத்துமீறி நுழைந்தனர். அக்டோபரில் நடந்த தேர்தலில் சதரின் குழுவே, நாடாளுமன்றத்தில் மிகப் பெரிய கட்சியாக வெற்றி பெற்றாலும், புதிய அரசாங்கத்தை உருவாக்குவதில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் இன்னும் அகலவில்லை..
பாக்தாத்தின் உயர்-பாதுகாப்பு பசுமை மண்டலத்தில் அத்துமீறி நுழைந்த போராட்டாக்காரர்கள், புதன்கிழமைன்று நாடாளுமன்றத்தில் நடனமாடி பாடினார்கள். பலத்த பாதுகாப்புடன் கூடிய பசுமை மண்டலத்தின் வாயில்களை உடைக்கும் போராட்டக்காரர்களைத் தடுக்கும் முயற்சியில் காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி தடுத்தார்கள்.
மேலும் படிக்க | சவுதி அரேபியாவுக்கு அமெரிக்க அதிபரின் பயணம்
ஆனால், கூட்டத்தினர் முன்னோக்கிச் சென்று நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தனர். உலகளாவிய எரிசக்தி விலைகள் உயர்ந்துள்ள போதிலும், எண்ணெய் வளம் கொண்ட ஈராக் அரசியல் மற்றும் சமூக பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.
இராக்கில் அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற தேர்தலில் சதரின் குழு வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலை நிலவுவதால், நாட்டில் ஸ்திரத்தன்மை இல்லாமல் இருக்கிறது. நாடாளுமன்றத்தில் நுழைந்த சதரின் ஆதரவாளர்கள், முழக்கமிட்டும், ஆரவாரம் செய்தும், புகைப்படம் எடுத்துக்கொண்டும், தேசியக் கொடிகளை ஏந்தியவாறு நாடாளுமன்ற வளாகத்தில் சுற்றித் திரிந்தனர்.
எதிர்ப்பாளர்களை "உடனடியாக வாபஸ் பெற" அழைப்பு விடுத்த பிரதமர் முஸ்தபா அல்-கதேமி, பாதுகாப்புப் படைகள் சட்டம் ஒழுங்கை சீர்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று எச்சரித்தார்.
எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவிட்ட சதர், "சீர்திருத்தத்தின் புரட்சி இது மற்றும் அநீதி மற்றும் ஊழலை நிராகரித்தல்" என்று எழுதினார்.
மேலும் படிக்க | ஒரு டிரில்லியன் டாலர் கற்பனை நகரத்தை உருவாக்கும் சவூதி அரேபியா
கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 329 இடங்களில் 73 இடங்களை சதர் கூட்டணி கைப்பற்றியிருந்தாலும், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுக்கள் முடங்கியுள்ளன.
பல தசாப்த கால மோதலில் இருந்து நாடு மீளப் போராடும் போது சீர்திருத்தங்களைத் தடுக்கும் வகையில், நாட்டின் அரசியல் சூழ்நிலை இருக்கிறது. அரச தலைவர் அல்லது அமைச்சரவை இல்லாமல் 290 நாட்களாக இராக் தவித்துக் கொண்டிருக்கிறது.
நாட்டின் அதிபர் மற்றும் பிரதம மந்திரியைத் தேர்ந்தெடுக்கும் பணியில் உள்ள சட்டமியற்றுபவர்கள் அக்டோபர் தேர்தல் முடிவடைந்து ஒன்பது மாதங்களாகியும் எந்தவொரு முடிவையும் எட்டவில்லை.
மேலும் படிக்க | போரில் திருப்புமுனை; லிசிசான்ஸ்கில் இருந்து பின்வாங்கும் உக்ரைன் துருப்புக்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ