ரணில் - ராஜபக்சே ஆதரவு MP-க்கள் இடைய கலைகலைப்பு....

இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே மற்றும் ரனில் ஆதரவு எம்.பி-க்கள் திடீர் இடையே கைகலப்பு...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 15, 2018, 12:02 PM IST
ரணில் - ராஜபக்சே ஆதரவு MP-க்கள் இடைய கலைகலைப்பு.... title=

இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே மற்றும் ரனில் ஆதரவு எம்.பி-க்கள் திடீர் இடையே கைகலப்பு...

இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உடனான கருத்து முரண்பாடு காரணமாக, அவரை பதவி நீக்கம் செய்துவிட்டு, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார் அதிபர் சிறிசேனா. பின்னர் ராஜபக்சே பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக மக்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.

இதயைடுத்து, இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று ராஜபக்சேவுக்கு எதிராக ரணில் விக்ரமசிங்கே கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இதனை எதிர்த்து ராஜபக்சே அவையை விட்டு வெளிநடப்பு செய்தார். இதனால் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

தொடர்ந்து, ராஜபக்சேவுக்கு எதிராக ரணில் விக்ரமசிங்கே கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக ரணில் தரப்பு சபாநாயகர் கரு ஜெயசூரியா அறிவித்தார். நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ராஜபக்சேவுக்கு பெரும்பான்மை இல்லை என்றும், அவர் பிரதமர் பதவிக்கு தகுதி இழந்ததாகவும் அவர் அறிவித்தார். இலங்கை நாடாளுமன்றத்தில் குழப்பம் நிலவியதையடுத்து அவை இன்று வரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் இலங்கை நாடாளுமன்றம் கூடியது. 

அப்போது, அவையில் பேசிய ராஜபக்சே, நேற்றைய தினம் நாடாளுமன்ற வரலாற்றில் கருப்பு தினம். நான் அதிபராகவும், பிரதமராகவும் பதவி வகித்துள்ளேன், ஆகவே, பிரதமர் பதவி எனக்கொன்றும் பெரிதல்ல. அதிருப்தியில் தான் நான் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டேன். என பேசிக்கொண்டிருந்த பொது நாடாளுமன்றத்தில் ராஜபக்சே மற்றும் ரனில் ஆதரவு எம்பிக்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. எம்.பி.க்கள் இடையேயான மோதலில் சபாநாயகர் கருஜெயசூர்யாவும் தாக்கப்பட்டார், ராஜபக்சே தரப்பு எம்.பி ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்த அமளியில் சபாநாயகர் வெளிநடப்பு செய்தார். இதையடுத்து, இலங்கை நாடாளுமன்றம் வரும் 21 ஆம் தேதி வரை ஒத்திவைப்பு.... 

 

Trending News