17 வயதே ஆன இளவரசி... இப்போது கடுமையான ராணுவ பயிற்சியில்... ஏன்?

Spain Princess Leonor: 17 வயதே ஆன ஸ்பெயின் நாட்டின் இளவரசி, அடுத்த மூன்று ஆண்டுகள் நீடிக்கும் இராணுவ பயிற்சியில் நேற்று இணைந்தார். இதுகுறித்த முழு தகவலை இதில் காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Aug 18, 2023, 04:49 PM IST
  • தற்போதைய மன்னர் ஆறாம் பெலிப்பின் மகளே லியோனோர்.
  • இவர் வரும் அக்டோபர் மாதம் 18 வயதை அடைகிறார்.
  • இராணுவம் மற்றும் கப்பல் படையில் அவர் பயிற்சி பெற உள்ளார்.
17 வயதே ஆன இளவரசி... இப்போது கடுமையான ராணுவ பயிற்சியில்... ஏன்?  title=

Spain Princess Leonor: ஸ்பெயின் அரச குடும்பத்தின் இளவரசி லியோனோர், அதாவது ஸ்பெயின் நாட்டின் சிம்மாசனத்தின் வாரிசு மற்றும் அதன் ஆயுதப் படைகளின் வருங்காலத் தளபதியாக உருவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அவர் மூன்று வருட இராணுவப் பயிற்சியை நேற்று தொடங்கினார். இது அரச குடும்பத்தின் வழக்கமாக உள்ளது. 

வரும் அக்டோபர் மாதத்தில் 18 வயதை லியோனோர் அடைகிறார். அவர் தற்போது மன்னர் ஆறாம் பெலிப்பின் மூத்த மகள் ஆவார். இவர் நேற்று மதியத்திற்குப் பிறகு ஜராகோசாவில் உள்ள இராணுவ அகாடமிக்கு வந்தடைந்தார். அப்போது பெற்றோரான, மன்னர் பெலிப் மற்றும் அரசி லெடிசியா மற்றும் அவரது சகோதரி சோபியா ஆகியோருடன் லியோனோர் வந்தார்.

இராணுவத்தில் பெண்கள் 

மிகுந்த உற்சாகத்துடன் தான் இந்த ஆண்டை எதிர்கொண்டதாக செய்தியாளர்களிடம் அவர் கூறினார். இருப்பினும், சற்று பதற்றமாக உணர்வதாகவும் அவர் வெளிப்படையாக கூறினார். இளவரசி லியோனோர், ஜராகோசாவின் இராணுவ அகாடமியில் ஒரு வருடத்தை கழிப்பார். பின்னர் அவர் ஒரு கடற்படைப் பள்ளியில் பயிற்சி மேற்கொள்வார். அங்கு அவர் ஸ்பெயின் கடற்படையால் பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் கப்பற்படையின் கப்பலில் பயணம் செய்து, ஜெனரல் ஏர் அகாடமியில் தனது படிப்பை முடிப்பார்.

கடந்த மார்ச் மாதம் லியோனோர் இராணுவப் பயிற்சியில் இணைவதை ஸ்பெயினின் பாதுகாப்பு அமைச்சர் மார்கரிட்டா ரோபிள்ஸ் அறிவித்தார். "இப்போது ஆயுதப் படையில் இணையும் பல இளம் பெண்களில் லியோனோரும் ஒருவர்" என்று அந்த அறிவிப்பை வெளியிட்டார். "சரியான நேரத்தில், ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியாக ஒரு பெண் இருப்பார், மேலும் சமீபத்திய ஆண்டுகளில் ஆயுதப் படைகளில் பெண்களை இணைக்க நாங்கள் மிக முக்கியமான முயற்சியை மேற்கொண்டு வருகிறோம்," என்று ரோபிள்ஸ் கூறியிருந்தார்.

மேலும் படிக்க | ஈபிள் டவரில் ஏறிய நபர்.. பாராசூட்டைக் கட்டிக்கொண்டு குதித்ததால் பரபரப்பு..!!

10 ஆண்டு கறை நீங்குமா...!

கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ச்சியான ஊழல் குற்றச்சாட்டிற்கு பிறகு ஸ்பெயினின் முடியாட்சி அதன் நன்மதிப்பை சரிசெய்ய பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. அதில் முக்கியமாக முன்னாள் மன்னர் ஜுவான் கார்லோஸ் தனது மகனுக்கு (தற்போதைய மன்னர் 6ஆம் பெலிப்) ஆதரவாக 2014ஆம் ஆண்டில் பதவி விலகினார்.

1980ஆம் ஆண்டுகளில் அவரது தந்தையின் (மன்னர் 6ஆம் பெலிப்) அடிச்சுவடுகளைப் பின்பற்றி, லியோனோரின் மிகவும் தீவிரமான இராணுவப் பயிற்சி அவரது பல்கலைக்கழகப் படிப்புகளுக்கு முன்னதாக இருக்கும் என்று அரசாங்கமும் அரச குடும்பமும் ஒப்புக்கொண்டன.

அடுத்த வாரிசு...

இராணுவ அகாடமிக்கு வெளியே ஊடகங்களிடம் நேற்று பேசிய மன்னர்,"இப்போது லியோனரின் முறை, இது உற்சாகமாக இருக்கிறது, நாங்கள் அவளுக்கு நிறைய ஆதரவை அளிக்கிறோம். ஆரம்ப நாட்கள் கடினமாக இருக்கும், ஆனால் அவர் முயற்சி மற்றும் பொறுமையுடன் அவற்றைக் கடந்து செல்வார்" என நம்பிக்கை தெரிவித்தார். சமீபத்தில் வேல்ஸில் உள்ள தனியார் UWC அட்லாண்டிக் கல்லூரியில் இரண்டு ஆண்டு காலப் படிப்பை லியோனோர் முடித்தார். ஸ்பெயின் அரச குடும்பத்தில் ஒரு ஆண் வாரிசு பிறக்காதபட்சத்தில், வாரிசு வரிசையில் லியோனோர் அடுத்து உள்ளார். அவரை தொடர்ந்து அவரது இளைய சகோதரி சோபியாவும் (16) உள்ளார்.

மேலும் படிக்க | பாத்ரூமில் விழுந்து விமானி உயிரிழப்பு... நடுவானில் 271 பயணிகள் - அடுத்து நடந்தது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News