தென்கொரிய நாட்டின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தலுக்கான வாக்கெடுப்பு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதிபர் பார்க் ஹியூன் ஹெய் மீது கடும் ஊழல் குற்றச்சாட்சு எழுந்ததை அடுத்து அவர் பதவி விலகும் நிலை ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது.
அதிபர் தேர்தலில் மொத்தம் 13 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இடதுசாரி கட்சி வேட்பாளர் மூன் ஜா இன், மக்களின் கருத்துக்கணிப்பில் முன்னணி பெற்றுள்ளார், ஆன் சியோல் சூ, அவருக்கு சற்றே பின் தங்கியுள்ளார். அதிபராக மூன் ஜாவிற்கே அதிக வாய்ப்புள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கி்ன்றன.
இடதுசாரி கட்சித் தலைவரான மூன், வடகொரியா விவகாரத்தில் பேச்சுவார்த்தையை அதிகம் வலியுறுத்தி வருபவர். வடகொரியாவின் தற்போதைய நிலைக்கு மூனின் ஜனநாயகரீதியான அணுகுமுறை பொருத்தமானதாக இராது என வலதுசாரியினர் கூறிவருகின்றனர்.
முன்னாள் அதிபர் பார்க் குன் ஹீ வடகொரியாவுடனான உறவுகளை முற்றிலுமாக துண்டித்த நிலையில், தற்போதைய பிரதான அதிபர் வேட்பாளர் மூன், வடகொரியாவுடன் நாட்டின் உறவுகளை வளர்க்க விரும்புகிறார்.