வட கொரிய அதிபர் கிம், 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று சீனாவிற்கு வருகை தந்துள்ளார். சீனாவில் இன்றும், நாளையும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வட கொரிய தலைவர் கிம் ஜோங்- உன் சீன ஜனாதிபதி Xi Jinping சந்தித்து ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார். இதையடுத்து, வட கொரிய மற்றும் சீனா தலைவர்களிடையே பல முக்கிய நிகழ்வுகள் கையெழுத்து ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக,வரலாற்று சந்த்பான வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு கடந்த ஜூன் 12-ந் தேதி சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஹோட்டலில் நடைபெற்றது.
அப்போது, ரஷ்யாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள வட கொரிய நாடாளுமன்ற சபாநாயகர் கிம் யாங் நம், அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புட்டினை சந்தித்துப் பேசினார். அப்போது, ரஷ்யாவிற்கு வருகை தரவுள்ளது குறித்து வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் எழுதிய கடிதம் புட்டினிடம் ஒப்படைக்கப்பட்டது குறிபிடத்தக்கது.
South Korea confirmed that North Korean leader Kim Jong-un is scheduled to visit China to meet Chinese President Xi Jinping.
Read @ANI Story | https://t.co/x2S9f0E4MU pic.twitter.com/C00GpwXAdT
— ANI Digital (@ani_digital) June 19, 2018