அமெரிக்காவின் தெற்கு டெக்சாஸில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 18 குழந்தைகள், ஓர் ஆசிரியர் உட்பட 19க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் இதுபோன்ற சம்பவம் நடப்பது புதிதல்ல. ஆனால் இதுபோன்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் மாணவர்களை குறிவைத்தே நடுத்தப்படுகிறதோ என்ற சந்தேகம் எழும் அளவிற்கு கடந்த 1999ஆம் ஆண்டு முதல் இன்று வரை நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
அந்த வகையில் கடந்த 1999ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், அமெரிக்காவின் கொலராடோவின் லிட்டில்டனில் உள்ள ஒரு பள்ளியில் பயங்கர துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது. அந்த பள்ளியில் படித்து வந்த மாணவர்கள் இருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உடன் பயின்ற 12 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியை என 13 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
அதேபோல கடந்த 2005ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அமெரிக்காவில் உள்ள ரெட் லேக் உயர்நிலைப் பள்ளிக்குள் நுழைந்த 16 வயது சிறுவன், ஐந்து மாணவர்கள் ஒரு ஆசிரியை, மற்றும் ஒரு காவலாலி உள்ளிட்டோரை தான் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுகொலை செய்துவிட்டு, தானும் அதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டான். அதனை தொடர்ந்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் முன்னதாக சிறுவன் தனது வீட்டில் இருந்து அவருடைய தாத்தா மற்றும் அவருடைய பெண் தோழி ஆகியோரை சுட்டுக்கொலை செய்துள்ளார் என்பதும் தெரிய வந்தது.
மேலும் படிக்க | துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு எப்போது முடிவு?...ஜோ பைடன் வேதனை
கடந்த 2007ஆம் ஆண்டு அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் 23 வயது இளைஞர் ஒருவர் பிளாக்ஸ்பர்க் வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த துப்பாச்சூட்டில் 32 பேர் பரிதாபமாக கொல்லப்பட்ட நிலையில் பலர் படுகாயம் அடைந்தனர். பின்னர் துப்பாச்சூடு நடத்திய நபர் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.
2012ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூடவுன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 19 வயது இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் தனது தாயை சுட்டுக்கொன்றார். பின்னர் அங்கிருந்து, அருகே உள்ள சாண்டி ஹூக் தொடக்கப் பள்ளிக்குச் சென்ற அந்த இளைஞர் ஒன்றாம் வகுப்பில் படித்து வந்க பள்ளி மாணவர்கள் 20 பேர் மற்றும் ஆசிரியர்கள் 6 பேர் என மொத்தம் 27 பேரை சுட்டுக்கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார்.
அதேபோல கடந்த 2015ஆம் ஆண்டு, அமெரிக்காவின் UMPQUA சமூகக் கல்லூரிக்குள் நுழைந்த மர்ம நபர் அங்கிருந்த மாணவர்கள் 9 பேரை சரமாரியாக சுட்டுக்கொன்றார். அதேபோல 9 பேர் படுகாயமும் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பின்னர் அந்த மர்ம நபர் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.
மேலும் படிக்க | அமெரிக்கா: டெக்சாஸ் பள்ளியில் துப்பாக்கிச் சூடு; 18 குழந்தைகள் உட்பட 20 பேர் கொலை
அதேபோல கடந்த 2018ஆம் ஆண்டு அமெரிக்காவின் இரு வெவ்வேறு பகுதிகளில் பயங்கர துப்பாச்சுடு சம்பவம் நடைபெற்றது. ஒன்று, ஹூஸ்டன் பகுதியில் உள்ள சாண்டா ஃபே உயர்நிலை பள்ளியில் நிகழ்த்தப்பட்டது. 17 வயது சிறுவன் நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலும் மாணவர்கள் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மற்றொன்று, புளோரிடாவில் உள்ள மார்ஜோரி உயர்நிலை பள்ளியில் நடத்தப்பட்டது. 20 வயது இளைஞரால் அரங்கேற்றப்பட்ட இந்த துப்பாச்சூடு சம்பவத்தில், 14 மாணவர்கள் மற்றும் 3 ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவில் தொடர்ந்து நடைபெற்று வரும் இதுபோன்ற துப்பாச்சூடு சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மாணவர்களை குறிவைத்து நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்களை கட்டுப்படுத்த அமெரிக்க அரசு தீவிரமான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.
மேலும் படிக்க | இந்தியாவின் வெற்றியும், சீனாவின் தோல்வியும்...! பிரதமர் மோடியைப் பாராட்டிய ஜோ பைடன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR