துருக்கியில் கடுமையான வறட்சி... 45 நாட்களில் தண்ணீரே இல்லாத நிலை ஏற்படலாம்..!!!

துருக்கி கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக மோசமான வறட்சியை எதிர்கொண்டுள்ள நிலையில், 45 நாட்களில் இஸ்தான்புலில் உள்ள தண்ணீர் அனைத்தும் தீர்ந்து போகும் நிலை உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 14, 2021, 06:14 PM IST
  • துருக்கி 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக மோசமான வறட்சியை எதிர்கொண்டுள்ளது.
  • வளர்ச்சி இல்லாத நிலை மற்றும் மோசமான மழைப்பொழிவு இஸ்தான்புல்லை இந்த நிலைக்கு ஆளாக்கியுள்ளது.
  • இஸ்மிர் மற்றும் பர்சா ஆகிய இடங்களில் உள்ள அணைகளும் சுமார் 30% குறைந்து வருவதால், தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றன.
துருக்கியில் கடுமையான வறட்சி...  45 நாட்களில் தண்ணீரே  இல்லாத நிலை ஏற்படலாம்..!!! title=

துருக்கி கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக மோசமான வறட்சியை எதிர்கொண்டுள்ள நிலையில், 45 நாட்களில் இஸ்தான்புலில் உள்ள தண்ணீர் அனைத்தும் தீர்ந்து போகும் நிலை உள்ளது.

 வளர்ச்சி இல்லாத நிலை மற்றும் மோசமான மழைப்பொழிவு இஸ்தான்புல்லை (Istanbul) இந்த நிலைக்கு ஆளாக்கியுள்ளது. இதனால், 1கோடியே 70 லட்சம் பேர் உள்ள இஸ்தான்புலில் தண்ணீர் தீர்ந்து போகும் நிலை உள்ளது.

முன்னதாக, அங்காராவின் மேயர் மன்சூர் யவாஸ், நகரத்தின் ஒமர்லி அணையில் 110 நாட்களுக்கு தேவையான நீர் மட்டுமே உள்ளது என்பதை உறுதிப்படுத்தியிருந்தார், இது கடந்த 15 ஆண்டுகளில் மிகக் குறைவானது.

இதற்கிடையில், துருக்கியின் (Turkey) அடுத்த இரண்டு பெரிய நகரங்களான இஸ்மிர் மற்றும் பர்சா ஆகிய இடங்களில் உள்ள  அணைகளும் சுமார் 30% குறைந்து வருவதால், தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றன. 

பொதுவாகவே துருக்கி ஒரு வறட்சி நாடு, ஏனெனில் இங்கு ஆண்டுக்கு 1346 கன மீட்டர் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. 2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மிகக் குறைந்த மழைப்பொழிவு  காரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

ALSO READ | சவுதி அரேபிய இளவரசர் உருவாக்கும் சாலைகள், கார்கள் இல்லாத நவீன நகரம் ..!!!

தொழில்மயமாக்கல், மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக துருக்கி 1980 களில் இருந்து பல வறட்சிகளை எதிர்கொண்டது.

இஸ்தான்புல் தொழில்நுட்ப பல்கலைக்கழக கல்வியாளர் செவின் அசில்ஹான், '' துருக்கி அதன் புவியியல் இருப்பிடத்தின் காரணமாக  வறண்ட காலநிலையைக் கொண்டுள்ளது, மேலும் நாட்டின் காடுகள் மற்றும் பசுமைப் பகுதிகளின் எண்ணிக்கை குறைந்து வறட்சியை மேலும் அதிகரித்துள்ளது” என்றார்.

இஸ்தான்புல் நீர் மேலாண்மை நிபுணர் டாக்டர் அகான் அல்ஹான் “நீர் தேவையை கட்டுக்குள் வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, துருக்கி அணைகளை மேலும் அணைகள் கட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. துருக்கி கடந்த இருபது ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான அணைகளை கட்டியுள்ளது” என்றார்

பொருளாதார வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து, சுற்றுச்சூழல் பற்றிய எச்சரிக்கைகளை துருக்கி புறக்கணித்ததற்காக விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன. 

ALSO READ | டிரம்பிற்கு எதிராக கண்டன தீர்மானம்.. அடுத்தது என்ன..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News