தப்லிகி ஜமாத் மீது தடை விதித்தது சவுதி அரேபியா..!!

தப்லிகி ஜமாத் அமைப்பு பயங்கரவாதத்தை பரப்புவதற்கான நுழைவாயில் எனக் கூறி  சவுதி அரேபிய அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 12, 2021, 11:07 AM IST
  • சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார அமைச்சர் டாக்டர் அப்துல்லதீப் அல் ஷேக்கின் ட்வீட்.
  • 'தப்லிகி ஜமாத் பயங்கரவாதத்திற்கான நுழைவாயில்.
  • முத்தலாக், ஹலாலாவை ஊக்குவிப்பவர்கள் என குற்றசாட்டு.
தப்லிகி ஜமாத் மீது  தடை விதித்தது சவுதி அரேபியா..!! title=

ரியாத்:  இஸ்லாமிய நாடான சவுதி அரேபியா, இஸ்லாமிய அமைப்பான தப்லிகி ஜமாத் அமைப்பை தடை செய்துள்ளது. தப்லிகி ஜமாத் தீவிரவாதத்திற்குள் நுழைவதற்கான நுழைவாயிலைத் தவிர வேறில்லை என்று சவுதி அரேபியா கடுமையாக கூறியுள்ளது.

சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார அமைச்சர் டாக்டர் அப்துல்லதீப் அல் ஷேக் இது குறித்து ட்வீட் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை தொழுகைக்கு வரும் மக்களுக்கு தப்லிகி ஜமாஅத்தின் உண்மை நிலை குறித்து தெரிவிக்கவும், அவர்கள் வருவதற்கு தடை விதிக்கவும் மசூதிகளின் இமாம்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

சவூதி அரசாங்கத்தின் ட்வீட்

சவதி அமைச்சர் டாக்டர் அப்துல்லதீஃப் அல்-ஷேக் தப்லிகி ஜமாத் மற்றும் தாவா குழுவை தடை செய்த தோடு, அரசின் இந்த முடிவு குறித்து அனைத்து மசூதிகளின் இமாம்களும்,தொழுகைக்கு வரும் மக்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் இந்த இரண்டு அமைப்புகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். இந்த இரண்டு அமைப்புகளும் கூட்டாக அல் அஹ்பாப் என்று அழைக்கப்படுகின்றன.

'தப்லிகி ஜமாத் பயங்கரவாதத்திற்கான நுழைவாயில்'

வெள்ளிக்கிழமை தொழுகையின் போது இந்த இரண்டு அமைப்புகளின் நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு இமாம்கள் மற்றும் மதகுருக்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். தப்லிகி ஜமாஅத் மற்றும் தவாஹ் குழுவுடன்  தொடர்பும் வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

ALSO READ | வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அரசு மகளிர் விடுதியா?

தப்லிகி ஜமாத் இந்தியாவில் 1926 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. சவூதி அரேபியாவில் அதற்கு முன்பிருந்தே நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இது ஒரு தீவிர போக்கு கொண்ட சுன்னி இஸ்லாமிய அமைப்பு எனவும் தப்லிகி ஜமாத்துடன் தொடர்புடையவர்கள் முஸ்லீம் பகுதிகளுக்குச் சென்று, இஸ்லாமிய ஆண்கள் பதானி சல்வார் அணிய வேண்டும் எனவும், மீசையை மழித்து, தாடி வளர்க்க வேண்டும் என வலியுறுத்துவதாக சவுதி அரசு கூறியுள்ளது. மேலும் பெண்கள் புர்கா அணிய வேண்டும் எனவும் இந்த அமைப்பு வலியுறுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முத்தலாக், ஹலாலா ஆதரவாளர்கள்

தப்லிகி ஜமாத் அமைப்பு முத்தலாக், ஹலாலா மற்றும் பலதார மணம் ஆகியவற்றை கண்டிப்பாக பின்பற்றுவதோடு,  இஸ்லாத்தில் இன்றியமையாமல் கடைபிடிக்க வேண்டிய அம்சம் எனவும் கூறுகிறார்கள். கடந்த ஆண்டு, மோடி அரசு முத்தலாக் சட்டத்தை இயற்றியபோது, ​​தப்லிகி ஜமாத் அமைப்பினர் நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சவூதி அரேபியா மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து தப்லீக் ஜமாத் பல கோடி ரூபாய் நிதியுதவி பெற்று வருகிறது. இந்த அமைப்பு பெரும்பாலான நாடுகளில் அதன் பெரிய மையங்களை உருவாக்கியுள்ளது. இப்போது இந்த அமைப்பை சவுதி அரேபியா தடை செய்துள்ள நிலையில், இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் தப்லிகி ஜமாத்தை தடை செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

ALSO READ | ‘எலி’யால் தைவானுக்கு வந்த சோதனை - கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

Trending News